பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் | ஷில்பா செட்டி மற்றும் ராஜ் குந்த்ராவின் 97 கோடி சொத்துக்கள் முடக்கம்! |
விசாரணை' படத்தின் பெரும் வெற்றியை தொடர்ந்து 'அட்டகத்தி' தினேஷ் நடிப்பில் அடுத்து வெளிவரவிருக்கிற படம் 'ஒரு நாள் கூத்து'. இப்படத்தை அடுத்து 'அண்ணனுக்கு ஜே' என்ற படத்தில் நடிக்கிறார் 'அட்டகத்தி' தினேஷ். வெற்றிமாறனின் உதவியாளர் ராஜ்குமார் இப்படத்தை இயக்குகிறார். அண்ணனுக்கு ஜே என்ற தலைப்பைப் பார்த்தால் இது அரசியல் படம் போல் தெரிகிறதே? உங்கள் யூகம் சரிதான்.
அரசியல் அவலங்களை விமர்சிக்கும் வகையில் அரசியல் படமாக தயாராகிறது அண்ணனுக்கு ஜே. இதில் சட்டையர் வசனங்கள் அதிக அளவில் உள்ளதாம். தினேஷ் அரசியல்வாதியாக நடிக்கும் அண்ணனுக்கு ஜே படத்தின் படப்பிடிப்பு மார்ச் 1-ஆம் தேதி திருவண்ணாமலையில் துவங்கவிருக்கிறது. இப்படத்தில் தினேஷுக்கு ஜோடியாக மகிமா நம்பியார் நடிக்கிறார். தினேஷ் உடைய, அப்பாவாக மயில்சாமி நடிக்கிறார். ஏற்கெனவே அதாவது 1989 ஆம் ஆண்டில் கங்கை அமரன் இயக்கத்தில் அர்ஜுன் நடிப்பில் 'அண்ணனுக்கு ஜே' என்ற பெயரில் ஒரு படம் வெளியாகியுள்ளது. ஆனால் அது அரசியல் படம் அல்ல என்பது குறிப்பிடத்தக்கது. தேர்தல் நேரத்தில் இப்படியொரு படம் அவசியம்தான்.