டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
மஞ்சப்பை தான் விமல் கடைசியாக நடித்த வெற்றிப் படம். அதன் பிறகு வெளிவந்த நேற்று இன்று, ஒரு ஊர்ல ரெண்டு ராஜா, காவல், அஞ்சல படங்கள் அவருக்கு வெற்றிப் படமாக அமையவில்லை. விமலுக்கு இப்போது தேவை ஒரு கட்டாய வெற்றி. அதை மாப்பள சிங்கம் கொடுக்கும் என்ற நம்பிக்கையில் இருக்கிறார்.
ராஜசேகர் இயக்கி உள்ள இந்தப் படத்தில் அஞ்சலி ஹீரோயின், அஞ்சலிக்கும் ரீ எண்ட்ரியான அப்பாடக்கர் கைகொடுக்காதால் அவருக்கும் மாப்ள சிங்கம் முக்கியமான படம். விமல், சூரி காமெடி காமினேஷன் இதிலும் தொடர்கிறது. கூடவே காளி வெங்கட்டும் இருக்கிறார்.
கிராமங்களில் புதுமாப்பிள்ளை கெத்து காட்டி பொண்ணு வீட்டில் அலப்பறைய கொடுக்கும் மைனர் மாப்பிள்ளையின் கதை. விமலுக்கு மினிமம் கியாரண்டி கொடுக்கும் கிராமத்து காமெடி கதை. வழக்கமான தாய்மாமன் செண்டிமெண்ட், அத்தை மகளின் பம்பு செட் காதல். உள்ளூர் பஞ்சாயத்து பெருசு என்று போகிற கதைதான். என்றாலும் காமெடிகள் ஒர்க்அவுட் ஆனால் படமும் ஒர்க் அவுட் ஆகும். சரிந்து வரும் விமலின் மார்க்கெட் வேல்யூவும் அதிகமாகும். படம் வருகிற மார்ச் 11ந் தேதி வெளிவருகிறது.