ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
யட்சன் படத்திற்கு பிறகு கிருஷ்ணா நடிக்கும் படம் யாக்கை. அவருக்கு ஜோடியாக சுப்பிரமணியபுரம் ஸ்வாதி நடிக்கிறார். ஆண்மை தவறேல் படத்தை இயக்கிய டி.குழந்தை வேலப்பன் இயக்கியுள்ளார். யுவன் சங்கர்ராஜா இசை அமைத்துள்ளார். இதன் முதல் பாடல் காதலர் தினத்தன்று வெளியிடப்பட்டது. நீ என்று தொடங்கும் இந்தப் போடல் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. தற்போது படபப்பிடிப்புகள் முடிந்து அதற்கு பிறகான டப்பிங், பின்னணி இசை கோர்ப்பு பணிகள் நடந்து வருகிறது.
"இது ஒரு அழகான காதல் கதை. படம் வெளிவந்த பிறகு கதிர், கவிதா கேரக்டர்கள் பேசப்படும். அந்த அளவிற்கு இதில் காதலை அழத்தமாகவும், யதார்த்தமாகவும் பதிவு செய்திருக்கிறோம். பிரகாஷ்ராஜ் இதுவரை ஏற்றிராத முக்கியமான கேரக்டரில் நடித்திருக்கிறார். சிங்கம்புலியும், எம்.எஸ்.பாஸ்கரும் கதையுடன் இணைந்து காமெடி செய்கிறார்கள். உலகில் காதலிக்காதவர்கள் என்று யாருமே இல்லை. எல்லோருக்குள்ளும் காதல் வந்து போயிருக்கும். அதை படம்பிடித்து காட்டியிருக்கிறோம்" என்கிறார் இயக்குனர் குழந்தை வேலப்பன்.