ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
என்னை அறிந்தால், மீகாமன், நானும் ரவுடிதான், கதகளி உள்பட பல படங்களில் வில்லனாக நடித்தவர் ஆத்மா. அதையடுத்து பண்டிகை, என்னோடு விளையாடு, தெறி போன்ற படங்களில் நடித்து வரும் அவர், கதகளிக்குப் பிறகு மோர் மிளகா, மானிடன் போன்ற புதிய படங்களில் கமிட்டாகியிருக்கிறார்.
இதுபற்றி ஆத்மா கூறுகையில், கதகளி படம் எனக்கு நல்ல பெயரை வாங்கிக்கொடுத்தது. அதன்காரணமாக தமிழ் மட்டுமின்றி, மலையாளம், தெலுங்கு சினிமாவில் இருந்தும் எனக்கு படவாய்ப்புகள் வந்த வண்ணம் உள்ளன. அந்த வகையில், தமிழைப்பொறுத்தவரை, விக்னேஷ் நடித்துள்ள அவன் அவள் படத்தை இயக்கியுள்ள ரமேஷ் மிர்னாலி அடுத்து இயக்கும் மோர் மிளகா படத்தில் டான் வேடத்தில் நடிக்கிறேன். துபாயில் நடக்கும் கதை இது. தீவிரவாதம் சம்பந்தப்பட்ட இந்த கதையில், நாயகர்களாக நடிக்கும் தமிழ்-மோகன் ஆகியோரை ஆட்டிப்படைக்கும் அதிரடி வில்லனாக நடிக்கிறேன்.
அதையடுத்து திருட்டு ரயில் ஹீரோ ரக்சன் நடிக்கும் மானிடன் படத்திலும் மெயின் வில்லனாக நடிக்கிறேன். இதுதவிர ஒரு மலையாள படத்திலும் கமிட்டாகியிருக்கிறேன். அந்த படத்திற்காக தற்போது வெயிட் குறைத்து வருகிறேன் என்று கூறும் ஆத்மா, கதகளிக்குப்பிறகு நான் நடித்துள்ள என்னோடு விளையாடு, பண்டிகை படங்களிலும் எனது ரோல் பெரிய அளவில் பேசப்படும். இதை யடுத்து, நான் நடிக்கும் கதாபாத்திரங்களுக்காக எனது கெட்டப்பை மாற்றி நடிக்கவும் தயாராக இருக்கிறேன். அதன்காரணமாக, தற்போது ஒரு மலையாள படத்துக்காக எனது உடல் எடையை 20 கிலோ வரை குறைத்துக்கொண்டிருக்கிறேன் என்கிறார் ஆத்மா.