‛கில்லி' ரீ-ரிலீஸ் : த்ரிஷா நெகிழ்ச்சி | சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் |
கடந்த டிசம்பர் மாதம் மலையாளத்தில் வெளிவந்து வெற்றி பெற்ற படம் சார்லி. இதில் துல்கர் சல்மான், பார்வதி, அபர்னா, நெடுமுடிவேணு நடித்திருந்தார்கள். மார்ட்டின் பரக்காட் இயக்கி இருந்தார், கோபிசுந்தர் இசை அமைத்திருந்தார். ஹீரோயின் பார்வதி காதலையும், திருமணத்தையும் வெறுக்கிறவர். ஒருமுறை நண்பன் ஒருவன் திருமணத்துக்காக செல்கிறபோது ஒரு அறையில் தங்குகிறார். அந்த அரை சுத்தமாகவும், நேர்த்தியாகவும் இருக்கிறது. பல வண்ண ஓவியங்கள் இருக்கிறது. இந்த ரூமை வடிவமைத்தவனும், ஓவியத்தை வரைந்தவனும் நிச்சயமாக ஒரு நல்ல மனிக இருப்பான் என்று கருதும் பார்வதி, அந்த ரூமுக்கு சொந்தக்காரான துல்கர் சல்மானை தேடிச் செல்கிற கதை. ஒரு கட்டத்தில் பார்வதி தன்னை தேடுவதை கண்டுபிடிக்கும் துல்கர் அவரை தேட வைத்து ரசிப்பார். இப்படி காமெடியும் காதலுமாக நகர்கிற கதை.
இதனை தமிழில் ரீமேக் செய்யும் உரிமையை பிரபல இந்திப் பட நிறுவனமான பிரமோத் பிலிம்ஸ் வாங்கி உள்ளது. இதில் மலையாள படத்தில் நடித்த பார்வதியே இதிலும் நடிப்பார் என்று தெரிகிறது. துல்கர் வேடத்தில் நடிக்க சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதியுடன் பேச்சு நடந்து வருகிறது.