பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
'தெறி' டீசர் உலக அளவில் அதிக லைக்குகள் பெற்றதில் மூன்றாமிடத்தைப் பெற்று ஒரு புதிய சாதனையைப் படைத்திருந்தது. தற்போது மீண்டும் ஒரு சாதனையைப் படைத்திருக்கிறது. அஜித் நடித்து வெளிவந்த 'வேதாளம்' டீசர் படத்தின் ஹிட்சை முறியடித்து அடுத்த கட்ட சாதனையை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறது.
'வேதாளம்' டீசரை இதுவரை 63 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பார்த்திருக்கிறார்கள். 'தெறி' டீசரை பார்த்தவர்களின் எண்ணிக்கை 67 லட்சத்தைக் கடந்திருக்கிறது. இந்த சாதனை ஒரே வாரத்தில் நடந்திருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. தமிழ்ப் படங்களின் டீசர்களில் இதுவரை 'ஐ' படம்தான் அதிக பார்வையாளர்களைப் பெற்ற ஒரு டீசராக இருந்து வருகிறது. இந்த டீசரை இதுவரை 1 கோடியே 13 லட்சம் பேர் வரை பார்த்திருக்கிறார்கள்.
'ஐ' படத்தின் சாதனையை இதுவரை வேறு எந்தப் படமும் முறியடிக்கவில்லை. தற்போது 'தெறி' டீசர் அந்த சாதனையை முறியடிக்குமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
விஜய் நடித்து இதற்கு முன் வெளிவந்த எந்தப் படங்களின் டீசரும் இந்த அளவிற்கு வரவேற்பைப் பெற்றதில்லை. தற்போது இணைய உலகில் விஜய்யும் அஜித்தை விட முந்திக் கொண்டிருக்கிறார். ஆனால், அஜித் ரசிகர்களுக்குத்தான் தற்போது என்ன செய்வதென்று தெரியாமல் இருக்கிறார்கள். அஜித் அடுத்த படத்தில் நடிக்க ஆரம்பித்து அந்த டீசர் வெளிவர அவர்கள் இன்னும் ஒரு வருடமாவது காத்துக் கொண்டிருக்க வேண்டும்.
அதுவரை 'தெறி' டீசர் சாதனை அப்படியே இருக்குமா, அல்லது 'கபாலி' அந்த சாதனையைக் கைப்பற்றுமா என்பது அடுத்த மாதத்தில் தெரிந்து விடும்.