ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
விரைவில் ஆங்கில படம் ஒன்றை இயக்க இருக்கிறார் கமல். ஹார்வர்ட் பல்கலை கழகத்தில் உரையாற்ற அமெரிக்க சென்றுள்ள கமல் அங்கு சுற்றுப்பயணம் செய்து பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார். அப்போது அவர் அங்குள்ள மீடியாக்களிடம் பேசும்போது ஆங்கில படம் இயக்கும் தகவலை கூறியிருக்கிறார்.
இதுபற்றி அவர் கூறியிருப்பதாவது: எனது அமெரிக்க நண்பர்கள் 3 பேருடன் சேர்ந்து ஆங்கில படம் ஒன்றை தயாரித்து, இயக்க இருக்கிறேன். அதற்கான டிஷ்கசன் தற்போது நடந்து வருகிறது. விரைவில் இது பற்றிய முறையான அறிவிப்புகள் வெளியிடப்படும்.
இந்தியாவில் தணிக்கை குழுவை சீரமைக்கும் முயற்சிகள் ஒருபுறமும், தணிக்கைக்கு எதிரான போராட்டங்கள் ஒருபுறமும் நடந்து வருகிறது. தணிக்கை என்ற வார்த்தை வேண்டாம் என்பது என் கருத்து. சான்றிதழ் என்று சொல்லலாம். திரைத்துறையில் கருப்பு பணத்தை குவிக்கும் போக்கு சமீபகாலமாக அதிகரித்துள்ளது. இது ஆரோக்கியமானதல்ல என்று கூறியுள்ளார் கமல்.