தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
விக்ரம் குமார் இயக்கத்தில் சூர்யா, சமந்தா, நித்யா மேனன் மற்றும் பலர் நடித்துள்ள படம் '24'. சூர்யா மீண்டும் லைம் லைட்டில் வருவதற்கு இந்தப் படத்தைத்தான் பெரிதும் நம்பியிருக்கிறார். 'அஞ்சான், மாஸ்' ஆகிய படங்களின் தோல்வியிலிருந்து மீண்டு வர அவர் '24' படத்தைத்தான் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறார். அறிவியல் கலந்த கதையாக உருவாகி வரும் இந்தப் படத்திற்காக நிறையவே செலவு செய்துள்ளார்களாம்.
கோடை விடுமுறையில் வெளியாக உள்ள இந்தப் படத்தின் ஒரு சில டிசைன்கள் கடந்த மாதம் வெளியிடப்பட்டு படத்தின் மீது ஒரு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. இந்தப் படத்தை ரசிகர்களிடம் கொண்டு சேர்ப்பதற்காக சூர்யா தரப்பில் தனி குழுவே வேலை செய்து கொண்டிருக்கிறதாம்.
பிப்ரவரி 24ம் தேதி இப்படத்தின் டீசரை வெளியிட இருக்கிறார்கள். ஏ.ஆர்.ரகுமான் இசையில் இந்தப் படத்தின் மீதான பாடல்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு இருக்கிறது.
அஜித், விஜய் படங்களின் டீசர் யு டியூபில் எப்படி சாதனை புரிகிறதோ அதே அளவிற்கு இந்தப் படத்தின் டீசரும் தனி சாதனை படைக்க வேண்டும் என்று சூர்யா எதிர்பார்க்கிறார். பார்ப்போம் சூர்யா ரசிகர்கள், அஜித், விஜய் ரசிகர்களை மிஞ்சுகிறார்களா என்று...?