வீர தீர சூரனாக மாறிய விக்ரம் | அஜித் பிறந்தநாளில் 'விடாமுயற்சி' அப்டேட்? | ஷங்கரின் மருமகன் யார் தெரியுமா...! | சென்னை வெள்ளத்தை அடிப்படையாக கொண்ட குறும்படத்திற்கு துபாயில் விருது | சரியான நேரத்தில் சரியானதை செய்துள்ளேன் - வித்யா பாலன் | தனுஷின் குபேரா டைட்டிலுக்கு திடீர் சிக்கல் | கடும் உடற்பயிற்சியில் இறங்கிய ஐஸ்வர்யா ரஜினி | விக்ரம் பிறந்தநாளில் வெளியான தங்கலான் படத்தின் மேக்கிங் வீடியோ | மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மன்சூர் அலிகான் | துவாரகீஷின் 'நான் அடிமை இல்லை' - மறக்க முடியுமா ? |
தென்னிந்தியத் திரையுலகில் தனது நடிப்பின் மூலம் தனி அடையாளத்தை ஏற்படுத்தியுள்ளவர் நடிகர் நாசர். வில்லத்தனம், குணச்சித்திரம், நகைச்சுவை என தற்போது பலவிதமான கதாபாத்திரங்களில் தமிழ், தெலுங்கு ஆகிய படங்களில் இடைவிடாமல் நடித்துக் கொண்டிருக்கிறார். தற்போது சோலார் எக்லிப்ஸ் என்ற ஆங்கிலப் படத்தில் நடிக்க உள்ளார். அல்ஜீரியா நாட்டு இயக்குனர் கரீம் டிரைடா மற்றும் இந்திய இயக்குனர் பங்கஜ் ஷேகல் ஆகியோர் இந்த்ப் படத்தை இயக்குகிறார்கள்.
இதற்கு முன் நாசர் இரண்டு ஆங்கிலப் படங்களிலும் ஒரு ஹாலிவுட் படத்திலும் நடித்திருக்கிறார். 'நத்திங் பட் லைப், மார்னிங் ராகா ஆகிய இரண்டும் ஆங்கிலப் படங்கள், 'ஃபேர் கேம்' ஹாலிவுட் படம். சுதந்திரத்திற்கு முந்தைய இந்தியாவில் நடைபெறுவதாக கதை அமைக்கப்பட்டுள்ள சோலார் எக்லிப்ஸ் படத்தில் நாசர் ஒரு காவல் துறை அதிகாரியாக நடிக்க உள்ளார். இப்படத்தில் மேலும் சில இந்திய நடிகர்களும் நடிக்கிறார்கள்.
நாசர் தற்போது நடிகர் சங்கத் தலைவராகவும் பணியாற்றிக் கொண்டு, தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார்.