'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் | மே 17ல் வருகிறார் சத்யபாமா | பிளாஷ்பேக் : ஜானகியை காத்த ராமன் | 'மார்க் ஆண்டனி' வெற்றியைத் தக்க வைப்பாரா 'ரத்னம்'? | 'விக்ரம், லியோ, கூலி' - டைட்டில் டீசர் வீடியோ, எது பெஸ்ட்? | 10 வருடங்களுக்கு பிறகு ஜூனியர் என்டிஆர் பட இயக்குனர் - ஒளிப்பதிவாளர் பரஸ்பரம் குற்றச்சாட்டு | ஜன கன மன 2 எப்போது? - இயக்குனர் தகவல் | ஆவேசம் படத்துக்கு சமந்தா பாராட்டு |
அச்சமுண்டு அச்சமுண்டு படத்தை இயக்கியவர் அருண் வைத்தியநாதன். இந்த படத்தில் ஜோடி சேர்ந்து நடித்தபோதுதான் பிரசன்னா-சினேகாவுக்கிடையே காதல் மலர்ந்தது. அந்த படத்திற்கு பிறகு தமிழில் கல்யாண சமையல் சாதம், மலையாளத்தில் பெருச்சாழி ஆகிய படங்களை இயக்கிய அருண் வைத்தியநாதன் தற்போது அர்ஜூன் நடிப்பில் நிபுணன் என்ற படத்தை இயக்கி வருகிறார். ஏற்கனவே அவரது முதல் இரண்டு தமிழ்ப்படங்களிலும் நடித்த பிரசன்னா இந்த படத்திலும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.
மேலும், இப்படத்தில் நாயகியாக வரலட்சுமி நடித்து வருகிறார். தாரைத்தப் பட்டை படத்தில் நடித்து வந்தபோதே அவரை இந்த படத்திற்கு புக் பண்ணியிருந்தார் அருண் வைத்தியநாதன். ஆனால் அந்த படம் இப்போது ரிலீசான பிறகு வரலட்சுமிக்கு ஸ்கோர் பண்ணக்கூடிய பல காட்சிகளை எக்ஸ்ட்ராவாக சேர்த்திருக்கிறாராம். அந்த அளவுக்கு தாரைத்தப்பட்டை படத்தில் வரலட்சுமியின் நடிப்பு அவரை வெகுவாக பாதித்து விட்டதாம்.
அதோடு, நிபுணன் பட நாயகனான அர்ஜூனும் வரலட்சுமியின் நடிப்பை பாராட்டியதோடு, அவருக்கு நல்ல அழுத்தமான காட்சிகள் நிறைய கொடுக்கலாம் என்றும் சொன்னாராம், ஆக, நிபுணன் படத்திலும் வரலட்சுமியை வித்தியாசமான நடிகையாக பார்க்கலாம் என்கிறார்கள். அதோடு, இந்த படத்தில் அர்ஜூன் இதுவரையில்லாத ஒரு மாறுபட்ட கெட்டப்பில் தற்போது நடித்துக்கொண்டி ருக்கிறார். அந்த வேடத்தை கடைசி வரை சஸ்பென்சாக வைத்திருக்கவும் திட்டமிட்டுள்ளார்களாம்.