பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
சினிமாவில் வெற்றியடைய திறமை எந்தளவுக்கு முக்கியமோ அதே அளவுக்கு அதிர்ஷ்டமும் வேண்டும் என்று சொல்வார்கள். இது யாருக்கு சரியாக இருக்கிறதோ இல்லையோ... சிவகார்த்திகேயனுக்கு மிகச்சரியாய் பொருந்தியுள்ளது. பாலா இயக்கிய படம், விஷால் நடித்த படம், உதயநிதியின் படம் என சிவகார்த்திகேயனைவிட உயரத்தில் உள்ளவர்களின் படம் பொங்கல் போட்டியில் இருந்தது.
இந்நிலையில் ரஜினி முருகன் படத்தையும் பொங்கலுக்கு வெளியிட்டனர். மற்ற மூன்று படங்களுக்கு இடையில் ரஜினி முருகன் படம் சிக்கி சின்னாபின்னமாகப்போகிறது என்று திரையுலகினர் ஆரூடம் சொன்னதை பொய்யாக்கி, சிவகார்த்திகேயனின் முந்தைய படங்களின் வசூலை ரஜினி முருகன் திரைப்படம் முறியடித்து சாதனை படைத்திருக்கிறது.
பொன். ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த, வருத்தப்படாத வாலிபர் சங்கம் வசூலை முதல் 4 நாட்களில் ரஜினி முருகன் தாண்டிவிட்டதாக சிவகார்த்திகேயன் தரப்பில் சொல்கின்றனர். ஜனவரி 14ம் தேதி வெளியான இப்படத்துக்கு கடந்த வாரம் வரை திரையரங்கில் நல்ல வசூல் கிடைத்திருக்கிறது.
இந்த வாரம் இறுதிச்சுற்று, அரண்மனை - 2 என இரண்டு புதிய படங்கள் வெளியானதால், ரஜினி முருகன் படத்துக்கு வசூல் சற்று குறைந்துள்ளது. அது மட்டுமல்ல தியேட்டர்களின் எண்ணிக்கையும் கணிசமாக குறைந்துவிட்டது.