Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

இரண்டே வாரத்தில் இண்டர்நெட்டுக்கு வந்த தாரை தப்பட்டை

02 பிப், 2016 - 17:39 IST
எழுத்தின் அளவு:
Tharaithapattai-released-in-online

இயக்குநர் பாலா மீது ரசிகர்கள் வைத்த நம்பிக்கை மெல்ல நசுங்கி வருகிறது. சேது, நந்தா, பிதாமகன் என அவரது ஆரம்பகாலப்படங்கள் ஏற்படுத்திய தாக்கம் அவரது லேட்டஸ்ட் படங்களில் இல்லாமல்போய்விட்டது. குறிப்பாக பாலாவின் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான தாரை தப்பட்டை படம் பாலா என்கிற அனுபவமிக்க கலைஞனின் படமாக இல்லை.

தமிழ்சினிமாவைப் பார்த்து சினிமா எடுத்த அமெச்சூர் டைரக்டர் எடுத்த படத்தைப்போலவே அரைவேக்காட்டுத்தனமாக இருந்தது தாரை தப்பட்டை. அதற்கான பலனை பாலா அனுபவிக்க வேண்டிய நிலையும் ஏற்பட்டது. அதாவது பொங்கலுக்கு பாலா இயக்கிய தாரை தப்பட்டை, பாண்டிராஜ் இயக்கிய கதகளி, பொன்ராம் இயக்கிய ரஜினி முருகன், திருக்குமரன் இயக்கிய கெத்து ஆகிய நான்கு படங்கள் வெளியாகின.

இந்த நான்கு இயக்குநர்களில் பாலாதான் எல்லாவகையிலும் முன்னணி இயக்குநர். மற்றவர்கள் எல்லாம் பாலாவின் அனுபவம், வெற்றி, புகழுக்கு முன்னால் சாதாரண இயக்குநர்கள்தான். ஆனால் பொங்கல் போட்டியில் இந்த மூன்று இயக்குநர்களும் பாலாவை கடைசி இடத்துக்கு தள்ளிவிட்டு முன்னேறிவிட்டனர். தாரை தப்பட்டை படம் கடைசி இடத்தைத்தான் பிடித்தது. உரிமை பெற்று இணையதளத்தில் படங்களை வெளியிடும் பிரபல இணையதளத்தில் தாரை தப்பட்டை படம் வெளியாகி இருக்கிறது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in