இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
நேரம் படத்தின் மூலம் அறிமுகமான நிவின்பாலி இன்றைய தேதியில் மலையாளத்தில் முன்னணி ஹீரோக்களில் ஒருவராக இருக்கிறார். நேரம் படத்தைத் தொடர்ந்து பல வெற்றிப்படங்களில் நடித்த நிவின்பாலிக்கு பிரேமம் மலையாளப்படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்து அவரது நட்சத்திர அந்தஸ்த்தை மேலும் உயர்த்தியது. இதற்கிடையில் ஆக்ஷன் ஹீரோ என்ற படத்தை சொந்தமாக தயாரிக்க ஆசைப்பட்ட நிவின்பாலி, அந்தப்படத்தை ஆரம்பித்த நாள் முதல் கஷ்டத்தில் இருக்கிறாராம்.
படத்தயாரிப்பு அவர் நினைத்ததுபோல் எளிதாக இல்லை... அதோடு திட்டமிட்டபடி படப்பிடிப்பு முடியாமல் பட்ஜெட்டும் அதிகமாகி முழி பிதுங்கிப்போய்விட்டார் நிவின். ஏறக்குறைய ஒரு வருடத்துக்குமேலாக ஆக்ஷன் ஹீரோ படத்தின் புரடக்ஷ்ன் வேலைகள் இழுத்துக் கொண்டேபோக நொந்துபோய்விட்டாராம் நிவின். ஒருவழியாக படத்தை முடித்து வரும் பிப்ரவரி 5 அன்று அக்ஷன் ஹீரோ படத்தை கேளரத்தில் வெளியிட உள்ளார். மலையாளத்தில் வெற்றியடைந்தால் தமிழிலும் அந்தப் படத்தை டப் பண்ண திட்டமிட்டுள்ளாராம்.