Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஈட்டி சென்ட்டிமெண்ட், மிருதன் படத்துக்கு ப்ளஸ்

05 ஜன, 2016 - 13:48 IST
எழுத்தின் அளவு:
Eeti-sentiment-plus-for-Miruthan-movie

2015 ஆம் ஆண்டில் 'ரோமியோ ஜூலியட்', 'தனி ஒருவன்', 'பூலோகம்' என வரிசையாக 3 வெற்றிப் படங்களில் நடித்து ஹாட்ரிக் வெற்றியை சுவைத்திருக்கிறார் 'ஜெயம்' ரவி. அவர் நடித்த அப்பாடக்கர் படம் எதிர்பார்த்த வசூலை அள்ளவில்லை என்றாலும் வணிக ரீதியில் அது தோல்விப்படம் இல்லை என்று சிலர் சொல்கிறார்கள். அப்பாடக்கர் தோல்விப்படமாகவே இருந்தாலும், தனி ஒருவன், பூலோகம் படங்களின் வெற்றி அதை மறக்கடித்துவிட்டது.


இந்நிலையில் ஜெயம் ரவியின் அடுத்த படம் ரிலீசுக்கு தயாராகிவிட்டது. தமிழ் சினிமாவின் முதல் ஜாம்பி (Zombi) படம் என்ற விளம்பரங்களுடன் உருவாகி வரும் 'மிருதன்' படம்தான் அது. 'நாய்கள் ஜாக்கிரதை' படத்தை இயக்கிய சக்தி சௌந்தர் ராஜன் இப்படத்தை இயக்கி வருகிறார்.


'குளோபல் இன்ஃபோடெயின்மென்ட்' நிறுவனம் சார்பில் மைக்கேல் ராயப்பன் தயாரித்து வரும் இப்படத்தில் 'ஜெயம்' ரவியுடன் முதன் முதலாக ஜோடி சேர்ந்துள்ளார் லட்சுமி மேனன். டி.இமான் இசை அமைக்கும் மிருதன் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இப்போது போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற் வருகின்றன.


இப்படத்தின் பாடல்களை வருகிற 9-ஆம் தேதி வெளியாக உள்ளநிலையில், பிப்ரவரி 12-ஆம் தேதி 'மிருதன்' படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருக்கிறார்கள். 'ஈட்டி' பட வெற்றியை தொடர்ந்து மைக்கேல் ராயப்பன் தயாரிப்பில் வெளிவரும் படம் என்பதால் சென்ட்டிமெண்ட்டாக மிருதன் படத்தை வாங்க விநியோகஸ்தர்கள் ஆர்வமாக இருக்கிறார்களாம்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in