'மஞ்சும்மேல் பாய்ஸ்' ஓடிடி உரிமை எவ்வளவு தெரியுமா? | நடிகை தமன்னாவுக்கு மும்பை சைபர் கிரைம் சம்மன் | ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? | விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் | ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் |
கேடி, தில்லாலங்கடி, அயன், படிக்காதவன், பையா, பாகுபலி உள்பட பல படங்களில் கமர்ஷியல் ப்ளஸ் கவர்ச்சி நாயகியாக வலம் வந்தவர் தமன்னா. அதேபோன்று வேங்கை, வீரம் உள்பட பல படங்களில் அவர் குடும்பப்பாங்காகவும் நடித்திருக்கிறார். என்றாலும் தமன்னாவைப் பொறுத்தவரை சிட்டி கேர்ள் கதாபாத்திரங்களுக்கு பொருத்தமான நடிகையாக இருப்பார் என்றே நினைக்கிறார்கள். அதனால் அவரைத்தேடி வருவதெல்லாம் நகரத்து கதைகளாகவே உள்ளதாம்.
ஆனால், தமன்னாவுக்கோ மண்வாசனை கதைகளில் நடிக்க வேண்டும் என்பதில் சமீபகாலமாக கூடுதல் ஆர்வம் ஏற்பட்டுள்ளதாம். அப்படி தான் நடிக்கும் ஒவ்வொரு படங்களும் பேசப்பட வேண்டும் என்று நினைக்கும் அவருக்கு இப்போது விஜயசேதுபதியுடன் நடிக்க கிடைத்துள்ள தர்மதுரை படத்தில் வழக்கமான நாயகியாக இல்லாமல் அழுத்தமான வேடம் கிடைத்துள்ளதாம்.
ஏற்கனவே சீனுராமசாமி இயக்கிய தென்மேற்கு பரவக்காற்று படம் பாணியில் உருவாகி வரும் இந்த தர்மதுரை படத்தில் டூயட்டே இல்லாத ஒரு புதுமாதிரியான கதாநாயகியாக நடிக்கும் தமன்னாவை பக்கா மதுரைக்கார பெண்ணாகவே மாற்றி ஆடிசன் நடத்தினாராம் டைரக்டர் சீனுராசாமி. அப்போது கனகச்சிதமாக அந்த கெட்டப்புக்கு பொருந்திய தமன்னா, கண்ணாடி முன்பு நின்று இது நானா என்று கிள்ளிப்பார்த்துக் கொண்டாராம். அந்த அளவுக்கு இதுவரை பார்க்காத மதுரைவாசியாக அவரை பக்காவாக மாற்றி விட்டாராம் சீனுராமசாமி.
தற்போது தர்மதுரை படப்பிடிப்பு தேனியில் நடந்து வருகிறது. விஜயசேதுபதி, ராதிகா நடிக்கும் காட்சிகள் படமாகிறதாம். தமன்னா ஜனவரியில் இருந்து படப்பிடிப்பு கலந்து கொள்கிறாராம்.