டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் | தன் படங்களின் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்குமார் | 'மஞ்சும்மேல் பாய்ஸ்' ஓடிடி உரிமை எவ்வளவு தெரியுமா? | நடிகை தமன்னாவுக்கு மும்பை சைபர் கிரைம் சம்மன் | ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? | விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் |
'கத்தி' படத்தை தயாரித்த 'லைகா புரொடக்ஷன்ஸ்' நிறுவனம் தமிழ்ப்பட தயாரிப்பில் கவனம் செலுத்த திட்டமிட்டுள்ளது. கத்தி படத்தைத் தயாரித்த பிறகு வேறு படத்தை தயாரிக்காமல் இருந்த லைகா நிறுவனம் அண்மையில் தனுஷ் தயாரித்த நானும் ரௌடிதான் படத்தை வாங்கி வெளியிட்டது. வேறு சில படங்களையும் வாங்கி வெளியிட உள்ளதோடு, இன்னொரு பக்கம் தொடர்ந்து பல படங்களை தயாரிக்கவும் திட்டமிட்டுள்ளது. ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் 'எந்திரன்-2' படத்தை பிரம்மாண்டமான முறையில் இந்நிறுவனம்தான் தயாரிக்கிறது.
இந்தப் படத்தை வெளியிட்ட பிறகு கமல் நடிக்கும் மருதநாயகம் படத்தையும் லைகா தயாரிக்க உள்ளது. இப்படங்கள் தவிர, ஜி.வி.பிரகாஷ் குமார் ஹீரோவாக நடிக்கும் ஒரு படத்தையும் இந்நிறுவனம் தயாரிக்கிறது! இப்படத்தின் பூஜை நேற்று சென்னையில் நடைபெற்றது. ஜி.வி.பிரகாஷ்குமாரை வைத்து 'டார்லிங்' படத்தை இயக்கிய சாம் ஆண்டன் இப்படத்தை இயக்குகிறார். இன்னும் பெயரிடப்படாத இப்படத்தில் ஜி.வி.பிரகாஷ்குமாருக்கு ஜோடியாக ஆனந்தி நடிக்கிறார். 'த்ரிஷா இல்லனா நயன்தாரா' படத்தில் ஜி.வி.பிரகாஷ் குமார் ஆனந்தி இருவரும் இணைந்து நடித்தனர். அப்படத்தின் வெற்றி சென்ட்டிமென்ட் காரணமாக மீண்டும் ஆனந்தியை கதாநாயகியாக நடிக்க வைத்திருக்கிறார்கள்.