பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
தமிழை விட மலையாளத்தில் சீரான வாய்ப்புகள் வருகிறது வேதிகாவிற்கு. கடந்த வருடம் குஞ்சாக்கோ போபனுடன் 'கஸின்ஸ்' என்கிற படத்தில் இணைந்து நடித்த வேதிகா, தற்போது பிருத்விராஜுடன் 'ஜேம்ஸ் அன்ட் ஆலிஸ்' என்கிற படத்தில் ஜோடியாக நடித்து வருகிறார்.. இந்தநிலையில் திலீப்புடன் 'வெல்கம் டூ சென்ட்ரல் ஜெயில்' என்கிற படத்தில் நடிக்க வேதிகாவை தேடி வாய்ப்பு வந்துள்ளது.. 'சிங்கார வேலன் படத்திற்கு பிறகு திலீப்-வேதிகா இருவரும் இந்தப்படத்தில் மீண்டும் இணைந்து நடிக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தப்படத்தை இயக்கும் சுந்தர்தாஸ் ஏற்கனவே திலீப்பை வைத்து சல்லாபம், குபேரன் ஆகிய வெற்றிப்படங்களை இயக்கியவர் தான். ஆனால் 2௦௦2ல் சுந்தர்தாஸ் இயக்கத்தில் 'குபேரன்' படத்தில் நடித்தபோது திலீப்புக்கும் அவருக்கும் மனக்கசப்பு ஏற்பட்டதாம். படம் வெளியாகி சூப்பர்ஹிட்டானாலும் கூட இருவருக்கும் பேச்சுவார்த்தைகள் இல்லாமல் இருந்து வந்தது. இந்த நிலையில் இருவருக்குமான மனஸ்தாபங்கள் பேசி தீர்க்கப்பட்டு 13 வருடங்கள் கழித்து இருவரும் மீண்டும் இணைகிறார்கள் என்பதுதான் படத்தின் ஹைலைட்டான விஷயம்.