விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் |
ரஜினி பட டைட்டிலை விட மாட்டார்கள் போலிருக்கிறது. கடந்த வாரம்தான் ரஜினி நடித்த தர்மதுரை படத்தின் பெயரை விஜய்சேதுபதியை வைத்து சீனுராமசாமி இயக்கும் படத்துக்கு சூட்டியுள்ள செய்தி வெளியானது. இந்நிலையில் இந்த வாரம் ரஜினி நடித்த வீரா படத்தின் பெயரை புதிய படத்துக்கு சூட்டியுள்ள தகவல் வெளியாகி உள்ளது.'கோ', 'யாமிருக்க பயமேன்', 'யான்' உட்பட பல படங்களை தயாரித்த எல்ரெட் குமாரின் 'ஆர்.எஸ்.இன்ஃபோடெயின்மென்ட்' நிறுவனம் தற்போது சரத் இயக்கத்தில் பாபி சிம்ஹா, நிக்கி கல்ராணி, பிரகாஷ்ராஜ் முதலானோர் நடிப்பில் 'கோ-2' என்ற படத்தை தயாரித்து வருகிறது
இப்படத்தை அடுத்து விஷ்ணு, கருணாகரன் இருவரையும் ஹீரோவாக வைத்து 'வீரா என்ற படத்தை தயாரிக்கிறார் எல்ரெட் குமார். ரஜினி நடித்த படங்களின் டைட்டிலை மீண்டும் வைத்தால் அந்தப் படத்துக்கு அட்டென்ஷன் கிடைக்கும் என்ற நம்பிக்கையில்இப்போது பல படங்கள் ரஜினியின் படப்பெயர்களில் உருவாகி வருகின்றன. இந்நிலையில், விஷ்ணு, கருணாகரன் நடிக்கும் படத்திற்கும் ரஜினி பட டைட்டிலான வீராவை சூட்டியிருக்கிறார்கள். 'வீரா'வை படத்தை இயக்கப்போவது யார்? மற்ற நடிகர் நடிகைகள் யார் போன்ற விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை. விரைவில் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகவிருக்கிறது.