டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
பல சரித்திரங்களை படைத்த சரித்திர படமான பாகுபலி, இனி விருதுகளையும் வாரிக் குவிக்க உள்ளது. அந்த வரிசையில் முதலாவதாக பாகுபலியில் மோசமான வில்லன் பல்லால தேவனாக நடித்த ராணா டகுபதிக்கு ஏசியன் விஷன் மூவி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
துபாயில் 2016 டிசம்பர் 2ம் தேதி நடக்கவிருக்கும் ஏசியன் விஷன் மூவி விருதில் பாகுபலியில் அதிபயங்கரமாக நடித்ததற்காக இந்த விருது அளிக்கப்பட்டுள்ளது. இதனால் தான் மிகவும் சந்தோஷமடைந்துள்ளேன் என்று ராணா டகுபதி டிவிட்டரில் பதிவு செய்துள்ளார்.
மேலும், இப்படம் பல பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. எத்தனை விருதுகளை வாங்கிக் குவிக்கப்போகின்றது என்று போகப் போக தெரியும்.