Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பெண்களின் ஆசீர்வாதம் - 'வேதாளம்' சிவா மகிழ்ச்சி

27 நவ, 2015 - 15:47 IST
எழுத்தின் அளவு:
Women-blessing-for-Vedalam-says-Director-Siva

ஒளிப்பதிவாளராக இருந்து தெலுங்கில் இயக்குனராக அறிமுகமானவர் சிவா. கார்த்தி, தமன்னா, சந்தானம் மற்றும் பலர் நடித்த 'சிறுத்தை' படத்தின் மூலம் தமிழில் இயக்குனராக அறிமுகமானார். 2011ம் ஆண்டு வெளிவந்த அந்தப் படம் மிகப் பெரும் வசூலைப் பெற்ற படமாக அமைந்தது. அந்தப் படத்தின் வெற்றி இயக்குனர் சிவாவுக்கு அஜித்தை வைத்து இயக்கும் வாய்ப்பைப் பெற்றுத் தந்தது.


2014ம் ஆண்டு அஜித், தமன்னா, சந்தானம் மற்றும் பலர் நடித்த 'வீரம்' படத்தை இயக்கினார் சிவா. அதற்கு முன் வரை 'சிறுத்தை' சிவா என்று அழைக்கப்பட்டவர் அதன் பின் 'வீரம்' சிவா என அழைக்கப்பட்டார். அந்தப் படத்தில் சிவாவின் திறமையைப் பார்த்த அஜித் மீண்டும் தன்னை வைத்து ஒரு படம் இயக்கும் வாய்ப்பைக் கொடுத்தார். சமீபத்தில் வெளிவந்த 'வேதாளம்' படம் மூலம் அஜித் - சிவா மீண்டும் இணைந்தனர். இந்தப் படம் இந்த ஆண்டின் மிகப் பெரும் வசூல் படமாக அமைந்துவிட்டது. அதனால் சிவா தற்போது 'வேதாளம்' சிவாவாக மாறிவிட்டார். மீண்டும் இந்தக் கூட்டணி இணையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


'சிறுத்தை, வீரம், வேதாளம்' ஆகிய படங்களின் வெற்றியில் பெண்கள் சென்டிமென்ட்டும் ஒரு முக்கிய காரணம். அதிரடி ஆக்ஷனுடன் பெண்களைப் பற்றி உயர்வாகவும் அவர்களைக் கவரும் விதத்திலும் காட்சிகளையும், வசனங்களையும் அமைத்துள்ளார் சிவா. அது குறித்து தன்னுடைய மகிழ்ச்சியை அவர் பகிர்ந்து கொண்டுள்ளார். “வீரம், வேதாளம்' ஆகிய படங்களில் பெண்களை மதிக்கும் என்னுடைய வசனங்களுக்கு பெண்களின் ஆசீர்வாதம் கிடைத்துள்ளதற்கு அஜித் சாருக்கு நன்றி,” எனத் தெரிவித்துள்ளார்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in