பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
நானும் ரௌடிதான் படத்தின் இயக்குநர் விக்னேஷ் சிவனை, நயன்தாரா காதலிப்பதாகவும், அவரையே விரைவில் கல்யாணம் செய்து கொள்ள இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே சிம்பு, பிரபுதேவாவை காதலித்த நயன்தாரா தற்போது விக்னேஷ் சிவனுடன் காதல் வயப்பட்டதை யாரும் சீரியஸாக எடுத்துக் கொள்ளவில்லை. இந்தக்காதல் எத்தனை நாட்களுக்கோ என்றுதான் கமெண்ட் அடித்தனர். நயன்தாராவோ இந்த காதலை இழக்க விரும்பவில்லை. அதன் அடையாளமாகவே தன்னுடைய காதலரான விக்னேஷ் சிவனுக்கு பிஎம்டபிள்யூ காரும், பெசன்ட்நகரில் பல கோடி மதிப்பில் சொகுசு ப்ளாட்டும் வாங்கிக் கொடுத்ததாக கூறப்படுகிறது.
நயன்தாரா - விக்னேஷ் சிவன் காதல் கதையில் லேட்டஸ்ட் தகவலாக, விக்னேஷ் சிவன் கிருஸ்தவ மதத்துக்கு மாறிவிட்டதாக அண்மையில் தகவல் வெளியானது. விக்னேஷ் சிவன் என்ற தன் பெயரை விக்டர் என்று மாற்றிக் கொண்டுவிட்டார் என்றும், இந்தப்பெயரை நயன்தாராவே செலக்ட் பண்ணிக் கொடுத்தார் என்றும் ஊடகங்களில் செய்திகள் அடிபட்டுக் கொண்டிருக்க...
இந்த தகவல்கள் எல்லாம் உண்மையா என்பதை அறிய விக்னேஷ் சிவனுக்கு போன் செய்தால், போனை அவர் எடுக்கவே இல்லை. எஸ்.எம்.எஸ். மூலம் விளக்கம் கேட்டாலும் பதில் இல்லை. விக்னேஷ் சிவன் மதம் மாறியது அவரது உறவினர்கள் மத்தியில் கடும் அதிருப்தியையும் எதிர்ப்பையும் ஏற்படுத்தி உள்ளதாம். அதனாலேயே ஊடகங்களிடம் இது பற்றி பேசத் தயக்கம் காட்டுகிறாராம் விக்னேஷ் சிவன். இந்த விஷயத்தை தனக்கு நெருக்கமாக உள்ள பண்பலை வானொலி ஆர்ஜேயிடம் சொல்லி இருக்கிறார் விக்னேஷ் சிவன்.