ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் | நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி | சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது | மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் | டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் | தன் படங்களின் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்குமார் |
'பிசாசு' படத்தில் ஒரு காட்சியை தவிர படம் முழுவதும் தனது ஒரிஜினல் முகத்தையே காட்டாமல் நம்மை மிரட்டிய பிரயாகா தற்போது டைரக்டர் கண்ணன் இயக்கத்தில் 'போடா ஆண்டவனே என் பக்கம்' படத்தில் விஷ்ணுவுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். இதை தொடர்ந்து மலையாளத்திலும் 'பாவா' என்கிற படத்தில் நடிக்க இருக்கிறார் பிரயாகா. 'பாப்பன குறிச்சும் வர்க்கிய குறிச்சும்' என்பதன் சுருக்கம் தான் 'பாவா'. தமிழில் அறிமுகமான இந்த கொச்சின் பெண்ணுக்கு மலையாளத்தில் இதுதான் முதல் படம் என்பதால் குஷியாக இருக்கிறார்.
இந்தப்படத்தின் ஷூட்டிங் ஏற்கனவே தொடங்கி நடைபெற்று வந்தாலும், பிரயாகாவின் போர்ஷன் வரும் டிசம்பர் மற்றும் ஜனவரியில் தான் படமாக்கப்பட இருக்கிறதாம். பாப்பனாக அனூப் மேனனும் வர்க்கியாக முரளிகோபியும் நடிக்கிறார்கள். வயதான அவ்வப்போது பைத்தியம் போல நடந்துகொள்ளும் இவர்களுக்கிடையே மாட்டிக்கொண்டு முழிக்கும் கேரக்டர்தான் பிரயாகாவுடையது. இந்தப்படத்தில் இளம் யுவதியாக நடிக்கும் பிரயாகாவை, அவரது கேரக்டருக்காக கொஞ்சம் மெலிய சொன்னாராம் படத்தின் இயக்குனர் சூரஜ் டாம். அதற்காக ரோம்புவும் ஒல்லியாகிவிடவும் கூடது என எச்சரித்தும் இருந்ததால் அவர்கள் சொன்னபடி சரியான எடைக்குரைப்பை செய்துள்ளாராம் பிரயாகா.