'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
'டார்லிங்', 'த்ரிஷா இல்லனா நயன்தாரா' என தொடர்ந்து வெற்றிப் படங்களைக் கொடுத்து வரும் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார்தான் இன்றைய தேதியில் மோஸ்ட் வான்டட் அப்கமிங் ஹீரோ.
யூத்தான கதை பண்ணும் உதவி இயக்குநர்கள் பலருக்கும் இப்போது முதல் சாய்ஸாக ஜி.வி.பிரகாஷ்குமார்தான்.
அவருக்கோ புதிய கதைகளை கேட்கக்கூட நேரமில்லையாம்.
'டார்லிங்', 'த்ரிஷா இல்லனா நயன்தாரா' என தொடர்ந்து ஜி.வி.பிரகாஷ்குமார் நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் 'புரூஸ்லீ'.
இந்த படம் தவிர 'கெட்ட பையன் கார்த்தி' என்ற படத்திலும் நடிக்கவிருக்கிறார்.
இவை தவிர, 'லைகா புரொடக்ஷன்ஸ்' நிறுவனம் தயாரிக்கும் ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார் ஜி.வி.பிரகாஷ் குமார்.
லைகா - ஜி.வி.பிரகாஷ்குமார் இணையும் படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகவிருக்கிறது.
விஜய் நடித்த 'கத்தி' படத்தை தயாரித்த 'லைகா புரொடக்ஷன்ஸ்' நிறுவனம் ரஜினியை வைத்து ஷங்கர் இயக்கவிருக்கும் 'எந்திரன்-2' படத்தை தயாரிக்க உள்ளது.
இதற்கிடையில், தற்போது திரைப்பட விநியோகத்திலும் இறங்கியுள்ள லைகா நிறுவனம், சமீபத்தில் தனுஷ் தயாரிப்பில் வெளியான 'நானும் ரௌடிதான்' படத்தை தமிழகம் முழுக்க வெளியிட்டது.
இந்த படத்தை தொடர்ந்து தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள 'தங்க மகன்' படத்தையும் இந்நிறுவனமே வெளியிடவிருக்கிறது.