ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
நடிகர் நகுலுக்கும் சென்னையைச் சேர்ந்த ஸ்ருதி பாஸ்கருக்கும் திருமண நிச்சயம் நடந்துள்ளது. இது பற்றி இன்று காலை நடிகர் நகுல் திருமண நிச்சய புகைப்படங்களுடன் டிவிட்டரில் பதிவிட்டிருந்தார். “நண்பர்களே, ஸ்ருதி பாஸ்கருடன் என்னுடைய திருமண நிச்சயத்தை அறிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறேன். உங்கள் ஆசியும் வாழ்த்துகளும் வேண்டும்,” என்று அவர் குறிப்பிட்டிருந்தார். சில மாதங்களுக்கு முன்பு பத்திரிகையாளர்களைச் சந்தித்த போது தான் சென்னையைச் சேர்ந்த பெண் ஒருவரைக் கடந்த நான்கு ஆண்டுகளாக காதலிப்பதாகவும், இருவரது பெற்றோர்களும் தங்களது திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்துவிட்டதாகவும் கூறியிருந்தார். ஆனால், அப்போது மேற்கொண்டு வேறு எந்த விவரங்களையும் அவர் தெரிவிக்கவில்லை. இன்றுதான் அவருடைய நிச்சயம் பற்றிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
90களில் முன்னணி நாயகியாக இருந்த நடிகை தேவயானியின் இளைய தம்பியான நகுல், ஷங்கர் இயக்கிய 'பாய்ஸ்' படத்தில் ஐந்து கதாநாயகர்களுடன் ஒருவராக அறிமுகமானார். தொடர்ந்து 'காதலில் விழுந்தேன், மாசிலாமணி, கந்தகோட்டை, நான் ராஜாவாகப் போகிறேன், வல்லினம், தமிழுக்கு எண் 1ஐ அழுத்தவும்,” ஆகிய படங்களில் நடித்துள்ளார். தற்போது 'அமளி துமளி' படத்தில் நடித்து வருகிறார். அவர் நாயகனாக நடித்துள்ள 'நாரதன்' படம் விரைவில் வெளியாக உள்ளது.