ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
பாலாவின் தயாரிப்பில் மிஷ்கின் இயக்கத்தில் வெளிவந்து சுமரான வெற்றியைப் பெற்ற படம் - 'பிசாசு'. இந்தப் படத்தை 'ராக்ஷஸி' என்ற பெயரில் கன்னடத்தில் ரீ-மேக் செய்தனர். இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸின் உதவியாளர் அஷ்ரஃப் இப்படத்தை இயக்கினார். 'ராக்ஷஸி' படத்தில் புதுமுகம் நவரசன் நாயகனாகவும், சிந்து லோகநாத் நாயகியாகவும் நடித்துள்ளார். தமிழில் ராதாரவி நடித்த கதாநாயகியின் அப்பா கேரக்டரில் கன்னடத்தில் நடித்தவர் விஷாலின் தந்தையான தயாரிப்பாளர் ஜி.கே.ரெட்டி. ஏற்கெனவே ஒரு சில படங்களில் ஜி.கே.ரெட்டி சிறிய வேடங்களில் நடித்துள்ளார். அந்த அனுபவத்தில்தான் இந்தப் படத்தில் முழுநீள கேரக்டரில் நடிக்க சம்மதித்தாராம்.
கர்நாடகாவில் கடந்த வெள்ளிக்கிழமை வெளியான இப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரும் வரவேற்பு பெற்றுள்ளது. தம் படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருப்பதை அறிந்து ஜி.கே.ரெட்டி, இயக்குனர் அஷ்ரஃப் மற்றும் 'ராக்ஷஸி' படக்குழுவினர் பெரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். தனது அப்பா நடித்த படம் வெற்றியடைந்தது குறித்து விஷாலும் மகிழ்ச்சியடைந்துள்ளார்.
'பிசாசு' படத்திற்கு இசை அமைத்த அரோல் கொரேலி தான் கன்னட 'ராக்ஷஸி'க்கும் இசை அமைத்துள்ளார். சென்னையிலுள்ள பிரபல பிரிவ்யூ தியேட்டரில் இப்படத்தின் பிரத்தியேக காட்சி திரையிடப்பட்டது. விஷால், ஜி.கே.ரெட்டி, இயக்குனர் அஷ்ரஃப் மற்றும் பலர் கலந்துகொண்ட அதில் தமிழ் சினிமா பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டனர்.