ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
திருடன் போலீஸ் படத்தை தயாரித்த கெனன்யா பிலிம்ஸ் ஜே.செல்வகுமார் தயாரித்துள்ள படம் உள்குத்து. அட்டக்கத்தி தினேஷ், நந்திதா, பால சரவணன், ஜான் விஜய், சாயாசிங், ஸ்ரீமன் ஆகியோர் நடித்துள்ளார். திருடன் போலீஸ் படத்தை இயக்கிய கார்த்திக் ராஜு இயக்குகிறார். படப்பிடிப்பு இறுதி கட்டத்தை நெருங்கி உள்ளது. பொங்கலுக்கு வெளிவருகிறது.
"உள்குத்து கடலோர மனிதர்களின் வாழ்க்கையை யதார்த்தமாகவும், நகைச்சுவையாகவும் சொல்கிற படம். கடலின் வண்ணமும், கடல் பாசியின் வண்ணமும், அங்கு வாழும் மக்களின் எண்ணமும்தான் திரைக்கதை. திருடன் போலீஸ் படம் எங்களுக்கு ஒரு இமேஜை கொடுத்தது. அதற்கு எந்த பாதகமும் வந்துவிடாதபடி இந்தப் படத்தை உருவாக்கி இருக்கிறோம். ஒருநாள் கூத்து பட ரிலீசின் போது முதல் டீசரை வெளியடுகிறோம். டிசம்பரில் பாடல்களை வெளிடுகிறோம். 2016 பொங்கலன்று படத்தை வெளியிடுகிறோம்" என்கிறார் இயக்குனர் கார்த்திக் ராஜு.