ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
மலையாள இளம் முன்னணி நடிகர் நிவின்பாலி தற்போது நடித்துவரும் ஆக்சன் ஹீரோ பைஜூ' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்சன் பணிகள் ஆரம்பமாகியுள்ளன. இதில் நிவின்பாலி போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. வளர்ந்துவரும் இளம் நடிகர்கள் அனைவருமே ஒரு படத்திலாவது போலீஸ் கேரக்டரில் நடித்துவிடவேண்டும் என்பதை லட்சியமாகவே வைத்திருப்பார்கள். ஆனால் நல்ல கதைக்காக காத்திருக்கவேண்டும் என்பதுடன் போலீஸ் வேடத்தில் நடிக்க அவர்கள் வயதும் உருவமும் ஒத்துழைக்க வேண்டும்.. நிவின்பாலிக்கு அதற்கான நேரம் இப்போது கைகூடி வந்திருக்கிறது.
கேரள போலீஸ் ஸ்டேஷன்களில் நடக்கும் சில யதார்த்த நிகழ்வுகளின் பின்னணியில் இந்தப்படத்தின் கதை பின்னப்பட்டுள்ளதாம். வெறுமனே சீரியஸாக மட்டும் இல்லாமல், காமெடி, இசை இரண்டிற்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளதாம். கடந்த வருடம் சூப்பர்ஹிட்டான '1983' படத்தின் மூலம் நிவின் பாலியின் கேரியரை உச்சத்தில் ஏற்றிய அப்ரிட் ஷைன் இந்தப்படத்தை இயக்குவதும், படத்தை நிவின்பாலியே முதன்முதலாக தயாரிப்பதும் விநியோகஸ்தர்களுக்கு முழு நம்பிக்கையை தந்துள்ளது.
எல்லாம் சரிதான்.. பிரேமம், ஒரு வடக்கன் செல்பி என தொடர்ந்து காதல் இளவரசனாகவே நடித்துவரும் நிவின்பாலிக்கு ஆக்சன் செட்டாகுமா என ஒரு சிலருக்கு சந்தேகம் இருக்கும்.. ஆனால் மலையாளத்தில் கடந்த வருடம் நிவின் பாலி நடித்த 'ஓம் சாந்தி ஓசானா' படத்தில் இவரது சீரியஸான நடிப்பையும் தோற்றத்தையும் பார்த்தவர்கள் இவர் போலீஸ் கேரக்டருக்கு சரியான ஆள் தான் என டபுள் ஓகே சொல்லிவிடுவார்கள்.