விஷாலின் வரவு செலவு கணக்கு: கோர்ட்டில் தாக்கல் | பிளாஷ்பேக்: இசையிலும் சாதனை படைத்த ராஜ்குமார் | ஹாலிவுட் பட ஆடிசனில் கலந்து கொண்ட பஹத் பாசில் | தெலுங்கு இயக்குனர் சங்கத்திற்கு பிரபாஸ் ரூ.35 லட்சம் நன்கொடை | ‛ஜவான்' பாடலுக்கு நடனமாடிய மோகன்லால் : ஷாருக்கான் நன்றி | இந்த வருடத்திற்கான ஓடிடி கதவுகள் மூடப்பட்டு விட்டன : விஷால் எச்சரிக்கை மணி | ஈரோட்டில் ரசிகர்களை சந்தித்த த்ரிஷா | வித்யாபாலன் டிவியில் பார்த்த முதல் பாடல், எது தெரியுமா ? | 'கில்லி' எத்தனை மொழிகளில் ரீமேக் ஆனது தெரியுமா ? | குருவாயூரில் நடந்த 'டாடா' நாயகி அபர்ணா தாஸ் திருமணம் |
வேதாளம் படம் குறித்து வெளியான செய்திகளும், அப்படத்தின் டீஸரில் இடம்பெற்ற விஷயங்களையும் வைத்து, அப்படத்தை ஆக்ஷன் படம் என்றே அஜித் ரசிகர்கள் நினைத்தனர்.
குறிப்பாக, பாட்ஷா படத்தின் சாயலில் கதை உள்ளதாக வெளியான தகவல் காரணமாக வேதாளம் படம் இன்னொரு பாட்ஷாவா இருக்கும் என்று எதிர்பார்த்தனர்.
அதன் காரணமாக, வேதாளம் படத்திற்கு சென்சாரில் யு சான்றிதழ் கிடைக்காது, யு/ஏ சான்றிதழ்தான் கிடைக்கும் என்று பலரும் எண்ணினார்கள்.
அதற்கு மாறாக, நேற்று வேதாளம் படத்தைப் பார்த்த தணிக்கைக்குழுவினர் யு சான்றிதழ் கொடுத்துள்ளனர்.
வேதாளம் படத்திற்கு யு சான்றிதழ் கிடைத்திருப்பதால் அஜித் ரசிகர்கள் மத்தியில் சின்ன கலக்கம் ஏற்பட்டுள்ளது.
என்னை அறிந்தால் படம் போல் சென்ட்டிமெண்ட் ஓரியண்டட் பிலிமாக இருக்குமோ என்பதே அந்தக்கவலை.
வேதாளம் ஆக்ஷன் படம் இல்லை ஃபேமிலி எண்டர்டெயினர்தான் என்பதை உறுதிப்படுத்துவதுபோல், வேதாளம் படம் குடும்பத்துடன் பார்க்கும் வகையிலேயே உருவாக்கப்பட்டிருக்கிறது என்று சொல்லி இருக்கிறார் அப்படத்தின் இயக்குநர் சிவா.
அதாவது, 2 மணி நேரம் 32 நிமிடங்கள் ஓடும் வேதாளம் படத்தில்ஆக்ஷன் காட்சிகளை குறைத்து, அஜித் லட்சுமிமேனன் சம்மந்தப்பட்ட சென்ட்டிமெண்ட் காட்சிகளை அதிகமாக வைத்திருக்கிறாராம்.
நவம்பர் 10ஆம் தேதி அன்று வேதாளம் படத்துடன் திரைக்கு வரும் கமலின் தூங்காவனம் படமோ பக்கா ஆக்ஷன் படம். எனவேதான் இப்படத்திற்கு சென்சாரில் யு/ஏ சான்றிதழ் கொடுக்கப்பட்டது.
வெற்றி எந்தப்படத்துக்கு?
ஆக்ஷன் படத்துக்கா?
சென்ட்டிமெண்ட் படத்துக்கா?