நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' |
அஜித் நடித்துள்ள 'வேதாளம்' படத்தின் வியாபாரம் கடந்த சில நாட்களாகவே பரபரப்பாக நடைபெற்று வருகிறது. அஜித்தின் இதற்கு முந்தைய படங்களின் வியாபாரத்தை இந்தப் படம் மிஞ்சுமா என்ற கேள்வி கோலிவுட்டில் தற்போது எழுந்துள்ளது. அஜித் நடித்து இதற்கு முன் வெளிவந்த 'என்னை அறிந்தால்' படத்தின் தமிழ்நாடு தியேட்டர் உரிமை 35 கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டது. இப்போது 'வேதாளம்' படத்தின் உரிமையும் அதே விலைக்கு விற்கப்பட்டுள்ளதாகவே தகவல்கள் தெரிவிக்கின்றன.
'என்னை அறிந்தால்' படம் மற்ற மாநில உரிமைகள், வெளிநாட்டு உரிமை, சாட்டிலைட் உரிமை, மற்ற உரிமைகள் என அனைத்தும் சேர்த்து சுமார் 65 கோடி ரூபாய் வரை நடைபெற்றிருந்ததாம். அந்தத் தொகையை தற்போது 'வேதாளம்' முறியடிக்க வாய்ப்புள்ளதா என்பதும் கேள்விக்குறியாகத்தான் இருக்கிறது என்கிறார்கள்.
தமிழ்நாட்டு உரிமை முந்தைய அளவிற்கு விற்கப்பட்டுள்ள சூழ்நிலையில் மற்ற உரிமைகளும் அதைவிட அதிகமாகப் போக வாய்ப்பில்லை என்றே சொல்கிறார்கள். ஒரு நடிகரின் வியாபாரம் முந்தைய படத்தின் வசூலை வைத்துத்தான் தற்போதைய படத்திற்குப் பேசப்படும் என்கிறார்கள். அந்த விதத்தில் 'என்னை அறிந்தால்' படம் வியாபாரம் ஆகியிருந்தாலும் வசூல் எதிர்பார்த்த அளவில் இல்லை என்றுதான் வினியோக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதனால், 'வேதாளம்' படமும் 'என்னை அறிந்தால்' படத்தைவிட ஓரிரு கோடிகள் குறைவாகவோ, அதிகமாகவோதான் முடியும் என்கிறார்கள். ஒரு வேளை 'வேதாளம்' படத்தின் வசூல் 'என்னை அறிந்தால்' படத்தின் வசூலை விட அதிகமானால் அடுத்து அஜித் நடிக்கும் படத்தின் வியாபாரம் இன்னும் அதிகமாக இருக்கும் என்கிறார்கள்.