பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
பிரபல தயாரிப்பாளர் ஆர்.பி.சவுத்ரியின் இளைய மகனான ஜீவா 2003ம் ஆண்டு ஆசை ஆசையாய் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். தற்போது அவர் நடித்து வரும் போக்கிரிராஜா அவருக்கு 25 வது படம். ராம், டிஷ்யூம், சிவா மனசுல சக்தி, கோ, நண்பன் ஆகியவை அவருக்கு முக்கியமான படங்களாக அமைந்தது.
தற்போது அவர் நடித்து வரும் 25வது படமான போக்கி ராஜாவை அவரது சூப்பர்குட் பிலிம்சின் மக்கள் தொடர்பாளர் பி.டி.செல்வகுமார் தயாரிக்கிறார். தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் படத்தை இயக்கிய ராம்பிரகாஷ் ராயப்பா இயக்குகிறார், ஹன்சிகா ஹீரோயின், சிபிராஜ் வில்லனாக நடிக்கிறார். இமான் இசை அமைக்கிறார். வனராஜ் ஒளிப்பதிவு செய்கிறார். தற்போது படப்பிடிப்பு வேகமாக நடந்து வருகிறது. பொங்கலுக்கு வெளிவரும் என்று தெரிகிறது. ஜீவா, நயன்தாரா நடித்துள்ள திருநாள் படத்தின் படப்பிடிப்புகளும் முடிந்துள்ளது.