மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் |
ஆயுத பூஜை தினத்தன்று நிறைய படங்கள் போட்டியிடாமல் 10 எண்றதுக்குள்ள, நானும் ரௌடிதான் ஆகிய இரண்டு படங்கள் மட்டுமே வெளிவந்தன. விஜய் மில்டன், விக்ரம், விக்னேஷ் சிவன், விஜய் சேதுபதி ஆகிய நான்கு விக்கள் சம்பந்தப்பட்ட படங்களில் எந்தப் படம் வெற்றி பெற்றது என்பதை ரசிகர்களும் தெரிந்து கொள்ள ஆவலாக இருக்கிறார்கள்.
விஜய் மில்டன் - விக்ரம் கூட்டணியில் வெளிவந்த 10 எண்றதுக்குள்ள படம் ரசிகர்களை நிறையவே ஏமாற்றிவிட்டதாகவே தகவல்கள் வெளிவந்துள்ளன. படத்தில் கதை என்பது ஒன்றுமே இல்லாமல் மிகவும் சாதாரணமாக இருப்பதாகவே பலரது கருத்தும் அமைந்துள்ளது. விக்ரம் போன்ற ஒரு நடிகரையும், முருகதாஸ் போன்ற ஒரு தயாரிப்பாளரையும் இயக்குனர் விஜய் மில்டன் ஏமாற்றிவிட்டதாகவே பெரும்பாலான விமர்சனங்கள் வெளிவந்துள்ளன.
விக்னேஷ் சிவன் - விஜய் சேதுபதி கூட்டணியில் வெளிவந்த நானும் ரௌடிதான் படம் வெற்றிக் கூட்டணியாக அமைந்துவிட்டதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளார்கள். எமோஷனலான ஒரு கதையை கலகலப்பாக நகர்த்தி ரசிகர்களை கவர்ந்துவிட்டார் விக்னேஷ் சிவன் என்கிறார்கள். விஜய் சேதுபதியும், நயன்தாராவும் போட்டி போட்டு நடித்திருப்பதில் நயன்தாரா முந்தி விட்டார் என்றுதான் விமர்சனங்களும் வெளிவருகின்றன.
இதனிடையே, யாரோ ஒருவர் 10 எண்றதுக்குள்ள படம் முதல் நாளில் 6.5 கோடி வசூலித்தது என ஒரு பதிவு போட, அதை ஏ.ஆர்.முருகதாஸ் ரி-டிவீட் செய்திருந்தார். ஆனால், தனுஷோ நானும் ரௌடிதான் படம் சுமாராக 2.16 கோடி வசூலித்தது என பதிவிட்டிருந்தார். நன்றாக இருப்பதாக சொல்லப்படும் நானும் ரௌடிதான் வசூல் 2.16 கோடி, மோசமாக இருக்கும் 10 எண்றதுக்குள்ள படத்தின் வசூல 6.5 கோடியா என ரசிகர்களே முருகதாசை கிண்டலடிக்க ஆரம்பித்துவிட்டார்கள்.