தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி | வைப் குமாரில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் | அமெரிக்காவில் பைக் விபத்தில் காயம் அடைந்த அனுஷ்கா பட ஹீரோ | சித்தார்த்-அதிதி ராவ்-க்கு நயன்தாரா வாழ்த்து | துபாய் மியூசியத்தில் தனது மெழுகுசிலையுடன் போஸ் கொடுத்த அல்லு அர்ஜுன் | சீரியல் நடிகை அக்ஷிதாவிற்கு நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்! |
நாளை ஆயுத பூஜையை முன்னிட்டு நான்கைந்து படங்களாவது வெளிவரும் என்று முதலில் எதிர்பார்க்கப்பட்டது. கடைசியில் போட்டியிலிருந்து சில படங்கள் வெளியேறிவிட்டன. கடைசியாக 'நானும் ரௌடிதான், 10 எண்றதுக்குள்ள' ஆகிய படங்கள் மட்டுமே போட்டியில் உள்ளன. விஜய் சேதுபதி, விக்ரம் இருவருமே முதல் நிலை ஹீரோக்கள் இல்லை என்றாலும் இருவருமே நடிப்பில் சிறந்தவர்கள் என்று பெயரெடுத்தவர்கள்.
'ஐ' பட வெற்றிக்குப் பிறகு விக்ரம் நடித்துள்ள '10 எண்றதுக்குள்ள' படம் அவருக்கு மற்றுமொரு எதிர்பார்ப்பை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. விஜய் மில்டனின் முந்தைய படமான 'கோலி சோடா'வும் வெற்றி பெற்ற படம். படத்தைத் தயாரிப்பது ஏ.ஆர்.முருகதாஸ் என்பதால் இப்படத்திற்கு நிறையவே எதிர்பார்ப்பு.
தனுஷ் தயாரிக்க விக்னேஷ் சிவன் இயக்க விஜய்சேதுபதி, நயன்தாரா, பார்த்திபன் என வித்தியாசமான கூட்டணியில் உருவாகியுள்ள படம் 'நானும் ரௌடிதான்'. அனிருத் இசை வேறு படத்திற்கு பிளஸ்பாயின்டாக அமைந்துள்ளது. விஜய் சேதுபதிக்கு இதற்கு முன் வெளிவந்த சில படங்கள் சரியாகப் போகவில்லை என்றாலும் இந்தப் படத்தை ரசிகர்கள் நிறையவே எதிர்பார்க்கிறார்கள்.
விஜய் மில்டன், விக்ரம், விக்னேஷ்சிவன், விஜய் சேதுபதி என 'வி' வரிசை இயக்குனர்கள், நடிகர்களின் படங்களாகவே நாளைய படங்கள் உள்ளன. யாருக்கு வெற்றி கிடைக்கப் போகிறது என்று நாளை தெரிந்துவிடும்.