மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு | ரஜினியை சந்தித்து ஆசி பெற்ற சாய் தன்ஷிகா பட ஹீரோ | ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் | நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி | சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது | மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் | டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 |
அனுஷ்கா நடித்த ருத்ரமாதேவி படம் தெலுங்கில் தயாரிக்கப்பட்டு தமிழிலும் டப் செய்யப்பட்டது. தெலுங்கில் கடந்த வாரம் வெளியிடப்பட்ட ருத்ரமாதேவி படம் தமிழில் இன்று வெளியாகி இருக்கிறது. நேரடி தமிழ்ப்படங்களைப்போல் அதிக எண்ணிக்கையிலான தியேட்டர்களில் வெளியாகி இருக்கிறது ருத்ரமாதேவி. சரித்திரப் படங்கள் என்றாலே 3 மணி நேரத்துக்கு குறைவாக எடுப்பதில்லை என்பதற்கு மாறாக ருத்ரமாதேவி படம் 2 மணி நேரம் 35 நிமிடங்கள் ஓடுவதுபோல் எடுக்கப்பட்டிருந்தது.
ஆந்திராவில் கடந்த வாரம் ருத்ரமாதேவி படம் வெளியானபோது சில காட்சிகள் ரசிகர்களை நெளிய வைத்திருக்கிறது. ஆந்திராவில் படத்துக்கு ஏற்பட்ட ரிசல்ட்டை அறிந்ததும், ருத்ரமாதேவி படத்தின் தமிழ் உரிமையை வாங்கியுள்ள ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் முரளி ராமசாமி சுமார் 20 நிமிடங்களுக்கான காட்சிகளை குறைத்துள்ளார்.
தற்போது ருத்ரமாதேவி 2 மணிநேரம் 12 நிமிடங்கள் மட்டுமே ஓடுகின்றன.