இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
தமிழ்த் திரையுலகத்தில் கமல்ஹாசனுக்கு அடுத்தபடியாக நடிப்புக்காக எதையும் செய்யத் துணியும் நடிகர் என்ற பெயரெடுத்த ஒரே நடிகர் விக்ரம். இந்த ஆண்டின் துவக்கத்தில் அவரது நடிப்பில் வெளிவந்த 'ஐ' திரைப்படம் விக்ரமின் கடும் உழைப்பை ரசிகர்களிடம் சரியாகக் கொண்டு போய்ச் சேர்த்தது. அந்தப் படத்திற்காக ஷங்கருக்கு கிடைத்த பாராட்டுக்களை விட விக்ரமுக்குக் கிடைத்த பாராட்டுக்கள்தான் அதிகம் என்பது மறுக்க முடியாத உண்மை.
கடந்த நான்கு ஆண்டுகளில் விக்ரம் நடித்து இந்த ஆண்டில்தான் இரண்டு படங்கள் வெளிவர உள்ளன. 2012ல் 'தாண்டவம்', 2013ல் 'டேவிட்', 2014ல் ஒரு படமும் வெளிவராத நிலையில் 2011க்குப் பிறகு இந்த ஆண்டில்தான் 'ஐ' படம் வெளிவந்தது, அடுத்த வாரம் '10 எண்றதுக்குள்ள' வெளிவர உள்ளது. 'அந்நியன்' படத்திற்குப் பிறகு கடந்த 10 ஆண்டுகளில் விக்ரம் நடித்து வெளிவந்த படங்களில் 'ஐ' படம் மட்டுமே கமர்ஷியலாகப் பெயர் பெற்றுத் தந்தது. '10 எண்றதுக்குள்ள' படமும் முழுக்க முழுக்க கமர்ஷியலாக உருவாக்கப்பட்டுள்ளதால் விக்ரமிற்கு ஏற்றத்தைக் கொடுக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.