மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
தமிழ், தெலுங்கில் தயாராகிக் கொண்டிருக்கும் படம் தோழா (தெலுங்கில் ஓபிரி). கார்த்திக், நாகர்ஜுனா, தமன்னா, பிரகாஷ்ராஜ், ஜெயசுதா உள்பட பலர் நடிக்கிறார்கள். அனுஷ்கா சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார். கோபி சுந்தர் இசை அமைக்கிறார், பி.எஸ்.வினோத் ஒளிப்பதிவு செய்கிறார். பிவிபி சினிமா தயாரிக்கிறது. வம்சி படிபள்ளி இயக்குகிறார்.
கார்த்திக் நடித்துள்ள ஆயிரத்தில் ஒருவன், பையா, நான் மகான் அல்ல படங்கள் தெலுங்கில் பெரிய வசூலை கொடுத்த படங்கள். அதனால் தெலுங்கு ரசிகர்களுக்கு கார்திக்கை மிகவும் பிடிக்கும். அவர் நடிக்கும் முதல் நேரடி தெலுங்கு படம். பயணம் படத்திற்கு பிறகு நாகார்ஜுனா நடிக்கும் நேரடி தமிழ் படம். பையா படத்திற்கு பிறகு கார்த்திக் தமன்னா இணைந்திருக்கும் படம். நீண்ட இடைவெளிக்கு பிறகு ஜெயசுதா நடிக்கும் படம். முதன் முறையாக அனுஷ்கா சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் படம் என பல சிறப்புகள் படத்திற்கு இருக்கிறது.
தி இன் டச்சபிள் என்ற பிரஞ்சு படத்தின் ரீமேக்தான் தோழா. பிரஞ்சு நாட்டில் செம ஹிட்டான படம். அதை அப்படியே காப்பி அடிக்காமல் நம் நாட்டிற்கேற்ப சில மாற்றங்களை செய்து உருவாக்கி வருகிறார்கள்.
உலக கோடீஸ்வரர்களில் ஒருவரான நாகார்ஜுனாவுக்கு திடீரென பெராலிக் அட்டாக் வந்து கழுத்துக்கு கீழ் அத்தனை உறுப்புகளும் செயலிழந்து விடுகிறது. பம்பரமாக சுற்றி சுற்றி வந்தவர் ஒரு நாற்காலிக்குள் முடங்கி விடுகிறார். அவரது நாற்காலியை தள்ளிக்கொண்டு செல்லும் உதவியாளர் பணிக்கு வருகிறார் கார்த்திக். அவருக்கு உலகின் எல்லா சுகத்தையும் உடனடியாக அனுபவித்து விட வேண்டும் என்கிற துடிப்பு. நிறைய சம்பாதிக்க வேண்டும் என்கிற வெறி. தமன்னா நாகார்ஜுனாவின் செகரெட்டரி. இந்த மூவருக்கும் இடையிலான உணர்வு போராட்டம்தான் கதை.
ஆக்ஷன் ஹீரோவான நாகார்ஜுனா நாற்காலியில் உட்கார்ந்தபடியே நடிப்பின் சிகரத்தை தொட்டிருப்பதாக சொல்கிறார்கள். துடிப்பான இளைஞனின் கேரக்டரை கார்த்திக் செம ஜாலியாக செய்கிறாராம். இருவரையும் பேலன்ஸ் செய்யும் பக்குவமான கேரக்டரில் தமன்னா நடிக்கிறார். நாகார்ஜுனாவின் தொழில் போட்டியாளராக பிரகாஷ் நடிக்கிறார். பெரும்பகுதி படத்தின் படப்பிடிப்புகள் பிரான்சில் நடந்துள்ளது. பெரிய பட்ஜெட்டில் பிரமாண்டமாக தயாராகி வருகிறது தோழா.