ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
புலி படம் வெளியானதிலிருந்து கடும் அப்செட்டில் இருக்கிறாராம் அஜித். அதுமட்டுமல்ல, தான் நடித்து வரும் புதிய படத்துக்கு வேதாளம் என்று தலைப்பு வைத்ததே தவறு என்றும் வருத்தப்பட்டு வருகிறாராம். என்ன விஷயம்? விஜய் நடித்த புலி படத்தில் வேதாள தேசம் என்றும், படம் முழுக்க வேதாளம்... வேதாளம்... என்று வசனங்கள் வருகிறது. எல்லாவற்றுக்கும் மேலாக படத்தின் நாயகனான விஜய்யே புலி படத்தில் வேதாளம் ஆக நடித்திருக்கிறார். இப்படியொரு சூழலில் தான் நடிக்கும் படத்துக்கு வேதாளம் என்று தலைப்பு வைத்ததை அஜித்தினால் ஜீரணிக்க முடியவில்லை.
அண்மையில் இயக்குநர் வீரம் சிவா உடன் நடைபெற்ற டிஸ்கஷனில், வேதாளம் என்ற தலைப்பை மாற்றிவிட்டு வேறு தலைப்பு வைக்கலாமா என்று ஆலோசிக்கப்பட்டதாம். தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம், இயக்குநர் சிவா இரண்டு பேருமே வேதாளம் என்ற தலைப்பை மாற்ற வேண்டாம் என்று உறுதியாக சொன்னதை அடுத்து அந்த முடிவு கைவிடப்பட்டதாம். ஆனாலும் அஜித் சமாதானமடையவில்லை. எனவே எந்த நேரத்திலும் அவர் மீண்டும் தயாரிப்பாளர் மற்றும் இயக்குநரை அழைக்கலாம். அதனைத் தொடர்ந்து வேதாளம் என்ற தலைப்பு மாற்றப்படலாம் என்பதே தற்போதைய நிலவரம்.