தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
சென்னை லயோலா கல்லூரியில் என்ஜினியா எனப்படும் கலைவிழாவை நேற்று நடந்தது. இசை அமைப்பாளரும், நடிகருமான ஜி.வி.பிரகாஷ் கலந்து கொண்டு விழாவை துவக்கி வைத்து பேசும்போது "நான் கல்லூரிக்கே சென்றதில்லை. கல்லூரி வாழ்க்கை இனிமையானது அதை ஒரு துளி கூட மிஸ் பண்ணக் கூடாது" என்றார்.
த்ரிஷா இல்லேன்னா நயன்தாரா படத்தின் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் பேசியதாவது: நாம் காணும் கனவை நோக்கி ஓடினால் நிச்சயம் அது ஒரு நாள் நிறைவேறும். நான் கல்லூரி காலங்களில் படிக்காமல் கண்ட பகல் கனவு இன்று நினைவாகி உள்ளது. நான் உங்கள் முன் இப்போது இயக்குனராக நிற்கிறேன். எனக்கு என் பள்ளி காலத்தில் இருந்தே இயக்குனராக வேண்டும் என்று ரொம்ப ஆசை அப்போதில் இருந்தே நான் கதை எழுதுவது , படம் பார்ப்பது என்று பெரிய அளவில் தயாராகி வந்தேன். ஆனால் நான் பொறியியல் தான் படிக்க வேண்டும் என்று என் அம்மா உறுதியாக இருந்ததால் நான் பி.இ படித்தேன்.