பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் | ஷில்பா செட்டி மற்றும் ராஜ் குந்த்ராவின் 97 கோடி சொத்துக்கள் முடக்கம்! | 'வார்-2' படப்பிடிப்பில் ஜிம் பயிற்சியாளரை மகிழ்வித்த ஜூனியர் என்டிஆர் | மோகன்லாலை சந்தித்தது மிகப்பெரிய கவுரவம் : ரிஷப் ஷெட்டி | வேற்றுக்கிரக மனிதரய்யா நீங்கள் : பஹத் பாசிலுக்கு விக்னேஷ் சிவன் புகழாரம் | இது என்ன பாகிஸ்தானா? : நடிகை ஹர்ஷிகா பூனாச்சா ஆவேசம் |
கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் ரஜினி நடித்த லிங்கா படம் எதிர்பார்த்த அளவுக்கு ஓடவில்லை என்றதும், அப்படத்தை வாங்கிய விநியோகஸ்தர்களும், திரையிட்ட தியேட்டர் அதிபர்களும் நஷ்டஈடு கேட்டு போராட்டம் நடத்தினார்கள். ஏறக்குறைய 9 மாதங்களுக்கு மேலாகியும் அந்த விவகாரம் இன்னும் ஓயவில்லை.
இன்னொரு முன்னணி ஹீரோவின் படமும் லிங்கா படம் போலவே பிரச்சனையில் சிக்க இருக்கிறது. வெங்கட்பிரபு இயக்கத்தில் சூர்யா நடித்த மாசு என்கிற மாசிலாமணி படம் மிகப்பெரிய தோல்வியை சந்தித்தது. இந்தப் படத்தை திரையிட்ட தியேட்டர்அதிபர்களுக்கு பல கோடி வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளதாம். மாசு என்கிற மாசிலாமணி படத்தின் தயாரிப்பாளரான ஞானவேல்ராஜா சில கோடிகளை தங்களுக்கு நஷ்டஈடாக திருப்பிக் கொடுக்க வேண்டும் என்று கோரிக்கையை எழுப்ப உள்ளனர்.
ஞானவேல்ராஜா நஷ்டஈட்டை தராவிட்டால், அவர் அடுத்து வெளியிட உள்ள த்ரிஷா இல்லைனா நயன்தாரா படத்துக்கு செக் வைக்க தியேட்டர் அதிபர்கள் திட்டமிட்டுள்ளனர். இதில் வேடிக்கை என்ன தெரியுமா? த்ரிஷா இல்லைனா நயன்தாரா படத்தை ஞானவேல்ராஜா வாங்கியதே இரண்டரை கோடிக்குத்தான்.