பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் | ஷில்பா செட்டி மற்றும் ராஜ் குந்த்ராவின் 97 கோடி சொத்துக்கள் முடக்கம்! | 'வார்-2' படப்பிடிப்பில் ஜிம் பயிற்சியாளரை மகிழ்வித்த ஜூனியர் என்டிஆர் | மோகன்லாலை சந்தித்தது மிகப்பெரிய கவுரவம் : ரிஷப் ஷெட்டி | வேற்றுக்கிரக மனிதரய்யா நீங்கள் : பஹத் பாசிலுக்கு விக்னேஷ் சிவன் புகழாரம் | இது என்ன பாகிஸ்தானா? : நடிகை ஹர்ஷிகா பூனாச்சா ஆவேசம் |
ஒருவருடைய வீழ்ச்சியில்தான் மற்றவர்களின் வளர்ச்சி இருக்கிறது என்று சொல்வார்கள். அது எந்தத்துறைக்குப் பொருந்துகிறதோ இல்லையோ... சினிமாத்துறையில் உள்ளவர்களுக்கு மிகச்சரியாய் பொருந்தும். அதை உண்மையாக்குவதுபோல் தற்போது ஒரு விஷயம் நடைபெற்று வருகிறது. பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள ரஜினி முருகன் படம் செப்டம்பர் 17 அன்று வெளிவருவதாக இருந்தநிலையில்... தற்போது கிடைத்த தகவலின்படி அந்த தேதியில் ரஜினி முருகன் படம் வெளியாகவில்லை. எனவே அதே தேதியில் தன்னுடைய தயாரிப்பில் விமல் நடித்த மாப்ள சிங்கம் படத்தை ரிலீஸ் செய்ய முடிவு செய்துள்ளார் எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் பி.மதன்.
இன்னொரு பக்கம், ஸ்டுடியோக்ரீன் கே.இ.ஞானவேல்ராஜாவும் செப்டம்பர் 17 அன்று களத்தில் குதிக்க இருக்கிறார். இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார் நடித்த த்ரிஷா இல்லைனா நயன்தாரா படத்தை வாங்கி வைத்துள்ள ஞானவேல்ராஜா, செப்டம்பர் 17 அன்று ரஜினி முருகன் படம் வெளியாகவில்லை என்றதும் த்ரிஷா இல்லைனா நயன்தாரா படத்தை வெளியிட தீவிர முயற்சியில் இறங்கி இருக்கிறார்.