டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
இன்றைய முன்னணி நடிகர்களில் ஒருவராக சிவகார்த்திகேயன் இடம் பெறுவதற்குக் காரணமாக அமைந்த படம் 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்'. இந்த சங்கம் இன்று மூன்றாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. பொன்ராம் இயக்கத்தில் இமான் இசையமைப்பில் சிவகார்த்திகேயன், ஸ்ரீதிவ்யா, சூரி மற்றும் பலர் நடித்த இந்தப் படம் 2013ம் வருடம் செப்டம்பர் 6ம் தேதி வெளிவந்தது. படம் வெளிவந்த அன்றே பாக்ஸ் ஆபிஸில் ஹிட் ஆனது.
மிகவும் கலகலப்பான படமாகவும், இனிமையான பாடல்களுடன் அமைந்த படமாகவும் வந்த இந்தப் படம் சிவகார்த்திகேயனுக்கு ஒரு ஸ்டார் அந்தஸ்தை ஏற்படுத்திக் கொடுத்தது. இந்தப் படத்தின் வெற்றி பல முன்னணி நடிகர்களை மிகவும் யோசிக்க வைத்தது. சுமார் 7 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட இந்தப் படம் ரூ.40 கோடி வரையில் வசூல் செய்ததாக சொன்னார்கள். படத்தின் சாட்டிலைட் உரிமை மட்டும் 9 கோடி ரூபாய் வரை விலை போனதாக பேச்சு இருந்தது.
அந்த வெற்றிக் கூட்டணியின் அடுத்த படமாக 'ரஜினி முருகன்' வரும் செப்டம்பர் மாதம் 17ம் தேதி வெளியாக உள்ளது. பட வெளியீட்டிற்கு முன்பே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்தப் படமும் வசூலில் சாதனை படைக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.