ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
படங்களுக்கு என்ன தலைப்பு வைப்பது என்ற தெரியாமல் திண்டாடிக் கொண்டிருக்கின்றனர் இயக்குநர்கள். ஒரு பக்கம் ஏற்கனவே வெளியாகி வெற்றியடைந்த ரஜினி படங்களில் தலைப்பை வாங்கி தங்களின் படங்களுக்கு சூட்டிக் கொள்கின்றனர். இன்னொரு பக்கம், புழக்கத்தில் இல்லாத வார்த்தைகளை படத்துக்கு பெயர்களாக சூட்டி வருகின்றனர். ஏற்கனவே அயன், கோ, அனேகன், ஏகன் என்ற பெயர்களில் வெளியான படங்கள் எல்லாம் இந்த ரகம்தான். தற்போது தயாரிப்பில் உள்ள படங்களிலும் இப்படிப்பட்ட தலைப்புகள் சில படங்களுக்கு சூட்டப்பட்டுள்ளன. சதுரன், இறைவி, மிருதன் ஆகிய படங்கள் ஒரு உதாரணம்.
இந்தப்பட்டியலில் இன்னொரு படமும் சேர்ந்திருக்கிறது. பிரபுதேவா ஸ்டுடியோஸ் என்ற பெயரில் படத்தயாரிப்பு நிறுவனம் துவங்கியிருக்கும் இயக்குனர் பிரபுதேவா, அதன் மூலம் மூன்று நேரடித் தமிழ்ப் படங்களை தயாரிக்கவிருக்கிறார் அல்லவா?அதில் ஒரு படத்தில் நடிகை வேதிகா நடிக்கவிருக்கிறார். ஐசரி வேலனின் பேரன் வருண் நாயகனாக அறிமுகமாகும் இப்படத்திற்கு விநோதன் எனப் பெயரிடப்பட்டிருக்கின்றனர். அறிமுக இயக்குனர் விக்டர் ஜெயராஜ் இப்படத்தை இயக்குகிறார்.
சைக்கலாஜிக்கல் ரொமான்டிக் டிராமாவாக உருவாகவிருக்கும் இந்த விநோதன் படத்தில் நாயகி வேதிகாவுக்கு விநோதமான வேடமாம். அதாவது, பள்ளி மாணவியாக நடிக்கும் வேதிகா சில காட்சிகளில் மட்டும் 60 வயதுப் பெண்மணியாக நடித்திருக்கிறாராம். இம்மாத இறுதியில் விநோதன் படத்தின் படப்பிடிப்பு துவங்குகிறது.
இந்தியன் படத்தில் சுகன்யா இளம் வயது பெண்ணாகவும், 60 வயது வயதான பெண்மணியாகவும் நடித்திருந்தார். இப்போது அதேப்போன்று வேதிகாவும் இரண்டு வித்தியாசமான ரோலில் நடிக்கிறார்.