நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' |
கேரளாவைச்சேர்ந்தவர் நடிகை மினுகுரியன். மலையாளத்தில் சிறிய கேரக்டர்களில் நடித்து விட்டு, பின்னர் பெரிய நடிகையாக வேண்டும் என்ற ஆசையுடன் கோடம்பாக்கத்துக்குள் நுழைந்தார் இவர். ஆனால், அவரது உருண்டு திரண்ட உடல்கட்டைப்பார்த்த கோலிவுட் இயக்குனர்கள் அவரை அடுத்த ஷகீலாவாக்கி விட வேண்டும் என்று அதற்கேற்ற கதைகளில் நடிக்க அவரை அழைத்தனர்.
ஆனால், முதலில் அதற்கு பிடிகொடுக்காமல் இருந்து வந்த மினுகுரியன், பின்னர் சில படங்களில் குளியல் காட்சிகளில் நடிக்கத் தொடங்கி, புல்லுக்கட்டு முத்தம்மா என்ற கிளாமர் படத்தில் நாயகியாக நடித்தார். அந்த படம் தமிழகமெங்கிலும் பெரிய அளவில் வசூலித்தது. அதனால் அதேபோன்ற கவர்ச்சிகரமான கதைகளில் நடிக்க தொடர்ந்து பல படங்கள் மினுகுரியனை முற்றுகையிட்டன.
அவரோ, இப்படியே போனால் தன்னை அடுத்த ஷகீலா ஆக்கி விடுவார்கள் என்று யோசித்து, ஷகீலா இமேஜ் எனக்கு வேண்டாம் என்னை விட்டுவிடுங்கள் என்று சொல்லி கவர்ச்சி கதவுகளை இழுத்து மூடிவிட்டார். இதனால் மினுகுரியனை நம்பி கிராமத்து கவர்ச்சி கதைகளை ரெடி பண்ணிய சில டைரக்டர்கள் இப்போது அவருக்கு இணையான உடல்கட்டு உள்ள கேரளத்து சேச்சிகளை தேடிக்கொண்டு திரிகிறார்கள்.