தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
குப்பி, வனயுத்தம் படங்களை இயக்கிய ஏ.எம்.ஆர்.ரமேஷ் இயக்கி வரும் படம் ''ஒரு மெல்லிய கோடு''. அர்ஜுன், ஷாம், மனீஷா கொய்ராலா, அக்ஷாபட் நடிக்கிறார்கள். இளையராஜா இசை அமைக்கிறார், சேது ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்கிறார். வெளிநாட்டில் நடந்த பாடல் படப்பிடிப்புடன் படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிந்து விட்டது.
இதுகுறித்து இயக்குனர் ஏ.எம்.ஆர்.ரமேஷ் கூறியதாவது: பல முக்கிய பிரமுகர்களின் மரணத்திற்கான உண்மையான காரணம் வெளிவருவதே இல்லை. பல காரணங்களாக அவை திரித்து கூறப்படுகிறது. அல்லது மறைக்கப்படுகிறது. அப்படி மறைக்கப்பட்ட ஒரு முக்கிய பிரமுகரின் கொலையை தடயவியல் நிபுணர் அர்ஜுன் கண்டுபிடிக்கும் கதை. கொலையாகும் முக்கிய பிரமுகராக மனிஷா கொய்ராலா நடிக்கிறார். அவரது கணவராக ஷாம் நடிக்கிறார். எனது முந்தைய படங்களான குப்பி, ராஜீவ் கொலையாளிகள் சிவராதன் சுபா பற்றியது. வனயுத்தம் வீரப்பன் பற்றியது. இதுவும் அதுபோன்ற ஒரு உண்மை சம்பவம்தான் அது என்ன என்பதை கூற இயலாது. படம் பார்க்கும்போது தெரியும் என்கிறார் ரமேஷ்.