ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
தமிழ் சினிமாவுக்கு தனுஷ் நடித்த மாப்பிள்ளை படம் மூலம் வந்தவர் ஹன்சிகா. அதன்பிறகு பிரபுதேவா இயக்கத்தில் ஜெயம்ரவி நடித்த எங்கேயும் காதல் படத்தில் நடித்ததை அடுத்து விஜய் நடித்த வேலாயுதம் படத்தில் அவரது முறைப்பெண்ணாக நடித்தார். அதுவும் மாடர்ன் பெண்ணான ஹன்சிகா அந்த படத்தில் கிராமத்து பெண்ணாக பாவாடை தாவணி அணிந்து நடித்து அசத்தினார். அந்த படத்தில் விஜய்-ஹன்சிகாவின் ரொமான்டிக் நடிப்பு பேசப்பட்டது.
ஆனபோதும் அதன்பிறகு விஜய்யுடன் தொடர்ந்து நடிக்கும் வாய்ப்பினை பெறாத ஹன்சிகா, தற்போதுதான் புலி படத்தில் மீண்டும் விஜய்யுடன் நடித்துள்ளார். இந்த படத்தில் ஸ்ருதிஹாசனே விஜய்க்கு ஜோடியாக நடித்தபோதும், இன்னொரு நாயகியாக ஒரு இளவரசி கெட்டப்பில் ஹன்சிகா நடித்திருக்கிறார். அதாவது டைம் மிஷினில் 500 வருடத்துக்கு பின்னாடி விஜய் செல்லும்போது அங்கிருக்கும் மகாராணி ஸ்ரீதேவியின் மகளாக ஹன்சிகா வருகிறாராம். அப்போது அவர் விஜய்யை ஒன்சைடாக லவ் பண்ணுவாராம்.