பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
அருண்பாண்டியனின் தயாரிப்பில் கழுகு பட இயக்குநர் சத்யசிவா இயக்கியுள்ள சவாலே சமாளி படத்தின் டிரெய்லர் வெளியீட்டுவிழா நேற்று நடைபெற்றது.
சென்னையில் உள்ள பீனிக்ஸ் மாலில் உள்ள லக்ஸ் திரையரங்கில் நடைபெற்றது விழா.
சவாலே சமாளி விழாவுக்கு வந்த திரைப்படத்துறையினரும், செய்தியாளர்களும் பொறுமையை இழக்கும்படி நடந்து முடிந்தது விழா.
சவாலே சமாளி படத்தின் டிரெய்லர் வெளியீட்டுவிழா நடைபெற்ற லக்ஸ் தியேட்டர் வெகு தூரத்தில் இருந்தும், அருண்பாண்டியனுக்காக பலரும் வருகை தந்திருந்தனர்.
ஆனால் சவாலே சமாளி படத்தின் டிரெய்லர் வெளியீட்டுவிழா குறிப்பிட்ட நேரத்தில் தொடங்கவில்லை. சுமார் இரண்டு மணிநேரம் தாமதமாகவே தொடங்கியது.
காரணம்.. சமாளி படத்தின் படத்தின் கதாநாயகியான பிந்துமாதவி. அவருக்கு தமிழில் படங்களே இல்லை. சவாலே சமாளி தவிர ஒன்றிரண்டு படங்களில்தான் நடித்து வருகிறார். அப்படியும் தன்னை நயன்தாரா ரேஞ்சுக்கு கற்பனை செய்து கொண்டு, அவர் நடித்த படத்தின் விழாவுக்கே இரண்டு மணி நேரம் தாமதமாக வந்தார்.