ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
பொதுவாக முன்னணி ஹீரோ நடித்த படங்கள் வெளியாகும்போது, மற்ற படங்கள் வழிவிட்டு ஒதுங்கி நிற்கும். இதுதான் திரையுலக நடைமுறையாக இருக்கிறது.
அதிலும் குறிப்பாக, ரஜினி, கமல், விஜய், அஜித், சூர்யா போன்ற ஹீரோக்கள் நடித்த படங்கள் வெளியாகும்போது வேற எந்தப்படம் வெளியானாலும் வேலைக்கே ஆகாது என்பதை புரிந்து வைத்துள்ளனர். அதனால்தான் முன்னணி ஹீரோக்களில் படம் வெளியாகும்போது அதற்கு முந்தைய வாரமோ அல்லது அடுத்த வாரமோ வெளியிடுவார்கள். விஜய் நடிப்பில் உருவாகிவரும் 'புலி' படத்தின் பாடல்கள், டீஸர், டிரைலர் ஆகியவை வெளியாகிவிட்டநிலையிலி, புலி படம் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு செப்டம்பர் 17ஆம் தேதி ரிலீஸாகவிருக்கிறது. புலி படத்துக்கு போட்டியாக அதே நாளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட விஷால் நடிக்கும் பாயும்புலி படம் இரண்டு வாரங்கள் முன்னதாக அதாவது செப்டம்பர் 4 அன்றே வெளிவரவிருக்கிறது. அதனால் போட்டியில்லாம புலி சோலோவாக களத்தில் குதிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் புலி வெளியாகும் அதே தினத்தில் த்ரிஷா இல்லைனா நயன்தாரா படத்தை வெளியிடுகிறார் ஸ்டுடியோக்ரீன் ஞானவேல்ராஜா.
இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ள இந்தப் படத்தை சுமார் 300 தியேட்டர்களில் வெளியிட திட்டமிட்டுள்ளார்.
இதனால், 500 தியேட்டர்களுக்கு மேல் வெளியாகவிருந்த புலி படத்தின் தியேட்டர்களின் எண்ணிக்கை 350 ஆக குறையும் என சொல்லப்படுகிறது.