ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் | நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி | சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது | மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் | டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் |
அதர்வா நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் 'சண்டிவீரன்' சக்சஸ் வீரனாகிவிட்டது. பாலாவிடமிருந்து 4 கோடிக்கு சண்டிவீரன் படத்தின் தமிழக உரிமையை வாங்கிய ஸ்ரீக்ரீன் சரவணன் முதல் மூன்று நாட்கள் வசூலிலேயே போட்ட பணத்தை எடுத்துவிட்டார். தொடர்ந்து தோல்விப்படங்களில் நடித்து வந்த அதர்வா, சண்டிவீரன் வெற்றியினால் சந்தோஷமடைந்துள்ளார்.
தற்போது 'ஈட்டி', 'கணிதன்' ஆகிய படங்களில் நடித்து வரும் அதர்வா 'ருக்குமணி வண்டி வருது' என்ற புதிய படத்திலும் நடிக்கிறார். 'பொண்ணு ஊருக்கு புதுசு' என்ற படத்திற்காக இளையராஜா இசை அமைத்து பாடிய ஹிட் பாடல் 'ருக்குமணி வண்டி வருது'. அந்தப் பாடல் வரியையே தன் படத்துக்கு தலைப்பாக வைத்திருக்கிறார் இப்படத்தை இயக்கும் ராஜ்மோகன். இவர் குங்குமப்பூவும் கொஞ்சம் புறாவும் என்ற படத்தை இயக்கியவர்.
'ருக்குமணி வண்டி வருது' படத்தில் அதர்வாவுக்கு ஜோடியாக பூஜா ஜாவேரி நடிக்கிறார். நடன இயக்குனராக இருந்து நடிகையான இவர் தற்போது தனுஷ் நடிக்க, பிரபு சாலமன் இயக்கும் படத்திலும் நடித்து வருகிறார்! 'ருக்குமணி வண்டி வருது' படத்தின் கதை தமிழ் நாடு - கேரளா எல்லை பகுதியில் நடக்கிறது. எனவே மலையாள நடிகர் சலீம் உட்பட சில மலையாளப்பட நடிகர் நடிகைகளும் இப்படத்தில் நடிக்கின்றனர். 'ருக்குமணி வண்டி வருது' படத்தின் படப்பிடிப்பு வருகிற 16-ஆம் தேதி கொடைக்கானலில் ஆரம்பமாகிறது.