பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
ஸ்ரீகாந்த், ராய் லட்சுமி நடிக்கும் சவுகார் பேட்டை படத்தை வி.சி.வடிவுடையான் இயக்குகிறார். மைனா, சாட்டை படங்களை தயாரித்த ஷாலோம் ஸ்டூடியோ தயாரிக்கிறது. சுமன், கஞ்சாகருப்பு, வடிவுக்கரசி, சரவணன், அப்புக்குட்டி, கோட்டா சீனிவாசராவ், தலைவாசல் விஜய், சம்பத், கோவை சரளா, சிங்கம்புலி, நான் கடவுள் ராஜேந்திரன், டி.பி.கஜேந்திரன், ரேகா, ஆர்த்தி என்ற நட்சத்திர பட்டாளமே நடித்துக் கொண்டிருக்கிறது.
லட்சுமிராய் பேயாகவும், ஸ்ரீகாந்த அகோரியாகவும் நடிக்கிறார்கள். பணம்தான் வாழ்க்கையை தீர்மானிக்கிறது என்பது மாதிரி பேய்தான் வாழ்க்கையை தீர்மானிக்கிறது என்பதை சொல்லும் படம். சீனிவாச ரெட்டி ஒளிப்பதிவு செய்கிறார். ஜான் பீட்டர் இசை அமைக்கிறார்.
தற்போது சவுகார் பேட்டை படம் தெலுங்கில் பேகம் பேட்டா என்ற பெயரிலும் இந்தியில் தந்திர சக்தி என்ற பெயரிலும் ஒரே நேரத்தில் தயாராகிறது. "இது இந்தியாவின் எல்லா மொழிக்கும் பொருந்துகிற பேய் கதை. கதையையும், எடுத்த வரை படத்தையும் பார்த்துவிட்டு சிலர் தெலுங்கு, இந்தி உரிமத்தை கேட்டார்கள். மற்றவர்களிடம் கொடுப்பதை விட நாமே தயாரிப்போம் என்று தயாரிப்பாளர் கூறிவிட்டதால் இப்போது மூன்று மொழிகளிலும் தயாராகிறது. செப்டம்பர் மாதம் ஒரே நேரத்தில் 3 மொழிகளிலும் வெளிவருகிறது" என்கிறார் இயக்குனர் வடிவுடையான்.