தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
நிக் ஆர்ட்ஸ் சக்கரவர்த்தி தயாரிப்பில், சிம்பு ஹன்சிகா நடித்த வாலு படம் கிட்டத்தட்ட 3 வருடங்களாக ரிலீஸ் ஆகாமலே இருந்தது. ஏற்கெனவே பலமுறை ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டும் குறித்த தேதியில் வெளியாகவில்லை. ஒவ்வொரு தடவையும் ஏதேதோ காரணங்கள் சொல்லப்பட்டன. கடந்த மூன்று வருடங்களாக இப்படத்தின் ரிலீஸ் தள்ளிக்கொண்டே வந்தது. கடைசியாக படத்தை தானே வாங்கி வெளியிடுவது என்ற முடிவுக்கும் வந்தார் சிம்புவின் அப்பாவான டி.ஆர்.,
வாலு ரிலீஸுக்கு எதிராக சில வழக்குகள் தொடுக்கப்பட்டதால், படத்தை வெளியிட இடைக்காலத் தடை விதித்தது நீதிமன்றம். கடந்த சில நாட்களாக எதிர்த்தரப்பினருடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைக்குப் பிறகு தற்போது அனைத்து பிரச்சனைகளும் சுமூகமாக பேசி தீர்க்கப்பட்டுவிட்டதாக சொல்லப்பட்டது. அதனைத் தொடர்ந்து வாலு ரிலீஸுக்கு எதிரான வழக்கு வாபஸ் வாங்கப்பட்டுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டபடி வாலு படம் வரும் சுதந்திர தினத்தை முன்னிட்டு, ஆகஸ்ட் 14ஆம் தேதி உலகமெங்கும் ரிலீஸாக இருப்பதாக சொல்கிறார்கள். அதே தினத்தில்தான் ஆர்யா நடித்த வாசுவும் சரவணனும் ஒண்ணாப்படிச்சவங்க படமும் வெளியாகிறது. அந்தப் படத்துக்கு ஏற்கனவே சுமார் 300 தியேட்டர்களை பிளாக் பண்ணிவிட்டதால் வாலு படம் மீண்டும் தள்ளிவைக்க வாய்ப்பிருப்பதாகவும் தெரிகிறது.