மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
ஏ.ஆர்.ரகுமான் கதை எழுதி முதன் முறையாக தயாரிக்க உள்ள 99 பாடல்கள் படத்திற்கு தற்போது கதாநாயகனைத் தேடி வருகிறார்களாம். இந்தப் படத்தை தமிழ், ஹிந்தி என இரு மொழிகளில் எடுக்க உள்ளார்கள். விஷ்வேஷ் கிருஷ்ணமூர்த்தி இயக்க உள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு இந்த வருடக் கடைசியில் ஆரம்பமாகும் எனத் தெரிகிறது.
நன்றாகப் பாடும் திறமை வாய்ந்த ஒரு இளைஞர் எப்படி தன் வாழ்வில் பிரபலமான பாடகராக மாறுகிறார் என்பதுதான் இந்தப் படத்தின் கதையாம். பாடகர் என்பதை எடுத்து விட்டு அந்த இடத்தில் இசையமைப்பளார் என எழுதினால் அது ரகுமானின் உண்மைக் கதையாக இருந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. ஆனால், இதுவரை படத்தின் கதை என்ன என்பதை ரகுமான் வெளிப்படையாக அறிவிக்கவில்லை. இருந்தாலும் நெருங்கிய வட்டாரங்கள் இது இசை பற்றிய ஒரு படம்தான் என்கிறார்கள்.
இந்தப் படத்திற்காக ரகுமான் ஏற்கெனவே இனிமையான பாடல்களை இசையமைத்துவிட்டாராம். பொருத்தமான நட்சத்திரங்கள் கிடைத்த பின் மற்ற வேலைகளும் வேகம் எடுக்கும் என்று தெரிகிறது.